உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: ஸ்டாலினுக்கு ஜெய்சங்கர் கடிதம்

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: ஸ்டாலினுக்கு ஜெய்சங்கர் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வெளியறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஜெய்சங்கர் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று(ஜூன் 27) பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களின் நலன் காப்பதில் மத்திய அரசு அதிகபட்ச முன்னுரிமை தருகிறது. மீனவர்களை முன்கூட்டியே விடுவிக்க இந்திய தூதரகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நமது மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க 10 ஆண்டுகளாக தே.ஜ., கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக அதீத முன்னுரிமை வழங்குவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தமிழ்வேள்
ஜூன் 28, 2024 10:26

இந்த முறை விடுதலையாக வாய்ப்பு இல்லை ..இலங்கை கடற்படை வீரரை கொன்றதாக கொலைக்குற்றம் வேறு உள்ளது ...= அண்ணண் இருக்கேன் -இறங்கி அடியுங்கோ = என்று அண்ணன் சீமாண்டி உளறி கொட்டிய வீடியோ ஒன்றும் சுற்றலில் உள்ளது.. வில்லங்கம் வலுவாக உள்ளதால் ..பப்பு வேகாது ....வசமாக சிக்கியபின் கதறுவது வேலைக்கு ஆகாது


RajK
ஜூன் 27, 2024 21:09

உக்ரைன் நாட்டிற்கு பஸ் விட்டு மாணவர்களை மீட்டுகொண்டுவந்ததாக நம்பும் ஊபீஸ்கள், திம்கா இந்த பிரச்சினைக்கும் அதே மாதிரி செய்வார்கள் என்று மூடர்கூட ஊபீஸ்கள் எதிர்பார்ப்பு.


S. Narayanan
ஜூன் 27, 2024 20:13

மீனவர்கள் மத்திய அரசால் மீட்க்க பட்ட பிறகு கொத்தடிமைகள் ஸ்டாலின் சரித்திரம் படைத்து விட்டார் என்று வாய் கூசாமல் குரல் கொடுப்பார்கள்.


M.S.Jayagopal
ஜூன் 27, 2024 19:07

கட்சத்தீவினை மீட்டாலும் தமிழக மீனவர்கள் பிரச்சினை தீர்ந்துவிடாது என்று ஒரு கருத்து உள்ளதே.


S S
ஜூன் 27, 2024 17:33

மோடி கச்சத்தீவினை மீட்பாரா


hari
ஜூன் 27, 2024 18:00

மீட்பார்.... நீ டாஸ்மாக் போகாமல் இருந்தால்..... கொத்தடிமையாக இல்லாமல் இருந்தால்....... முடியுமா???


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 17:28

எல்லை தாண்டி மீன் பிடித்த மீனவர்களைப் பிடிக்க முயன்ற இலங்கை ராணுவ வீரர் இறந்துவிட்டார். அது கொலை என இலங்கை அரசு விசாரிக்கிறார்கள். இப்போதைக்கு வெளியே விட வாய்ப்பில்லை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை