உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 211 மருந்துகள் தரமற்றவை: மத்திய அரசு அறிவிப்பு

211 மருந்துகள் தரமற்றவை: மத்திய அரசு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் நடத்திய பரிசோதனையில், 211 மருந்துகள் தரமற்றதாகவும், ஐந்து மருந்துகள் போலியாகவும் இருந்தன' என, மத்திய அரசின் மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.நாட்டில் விற்கப்படும், அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும், மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன. கடந்த மாதம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், காய்ச்சல், சளித்தொற்று, கிருமி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும், 211 மருந்துகள் தரமற்றவையாகவும், ஐந்து மருந்துகள் போலியானதாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.இந்த விபரங்கள், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின், https://cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றை பொதுமக்கள் பார்வையிடலாம். மேலும், தரமற்ற மருந்து உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Priyan Vadanad
நவ 25, 2025 00:29

என்னென்ன மருந்துகள் எந்தெந்த கம்பெனிகள் என்கிற விபரத்தை போடாமல் சும்மா பொத்தாம் பொதுவாக செய்திகளை வெளியிடுவதால் என்ன லாபம்? பெய்கின்ற மழைத்துளியில் ஒரு துளி பனித்துளி என்றால் எப்படி?


KOVAIKARAN
நவ 24, 2025 23:01

இதுபோன்ற தரமற்ற மருந்துகளை நோயாளிகளுக்கு எழுதித்தரும் மருத்துவர்களை என்ன செய்யப்போகிறார்கள்? அல்லது தரமற்ற அல்லது போலி மருந்துகள் என்று தெரிந்தே விற்பனை செய்யும் மருந்துக்கடைகளை என்ன செய்யப்போகிறார்கள்?


அப்பாவி
நவ 24, 2025 21:54

எல்லா மருந்து கம்பெனிகளும் ஒழுங்கா ஜி.எஸ்.டி கட்டியிருப்பாங்களே...


Karthik
நவ 24, 2025 21:54

இங்கே விவரம் கண்டு பிடிக்கலாம் cdsco.gov.in/cms/cms/en/Notifications/nsq-drugs/


Karthik
நவ 24, 2025 21:45

அந்த இணைய தளத்தில் எங்க இந்த விவரம் இருக்கிறதென்று கண்டுபிடிக்க முடியவில்லை


Rajan A
நவ 24, 2025 21:04

அந்த இணைய தளத்தில் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை