உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீண்டும் தூசி தட்டப்படும் 2ஜி வழக்கு: மேல்முறையீட்டை விசாரணைக்கு ஏற்றது டில்லி ஐகோர்ட்

மீண்டும் தூசி தட்டப்படும் 2ஜி வழக்கு: மேல்முறையீட்டை விசாரணைக்கு ஏற்றது டில்லி ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சி.பி.ஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டில்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. 2ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதற்கு பதிலாக முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கொடுத்ததாகவும் இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த வழக்கில் அப்போது மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது.அவர்கள் விடுதலையை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து இருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்கலாமா வேண்டாமா என்பது குறித்து விசாரணை டில்லி உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 22) நடைபெற்றது. அப்போது 2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Kasimani Baskaran
மார் 23, 2024 05:53

விசாரிக்கலாமா அல்லது வேண்டாமா என்பதை இவர்கள் முடிவு செய்யவே ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கும் பொழுது இவர்கள் இருவரும் ஓய்வு பெறும் வயதை எட்டிவிடுவார்கள் நீதித்துறையில் வேகத்தைப்பார்த்து பொது மக்கள் திகிலில் இருக்கிறார்கள்


Bakthavachalam Srinivasan
மார் 24, 2024 05:43

மிக சரியான கருத்து


RishiKudil Gurukulam
மார் 22, 2024 19:48

நம் நீதிமன்றம் மிகவும் சிறப்பானது யார் மனதும் புண்படக்கூடாது யாருக்கும் காயம் ஏற்படக் கூடாது என்பதற்காக, தீர்ப்புகளை ஆண்டுகளுக்குள் சொல்லாது


RishiKudil Gurukulam
மார் 22, 2024 19:47

இந்த நீதிபதிகள் வழக்கை முடிக்கிறதுக்குள்ள எல்லோரும் சாக ஆரம்பிச்சிடுவாங்க அப்புறம் வழக்கை தள்ளுபடி பண்ண வேண்டியது தான்


venugopal s
மார் 22, 2024 18:19

இந்த வழக்கு 2029 பாராளுமன்ற தேர்தலுக்கு முன் முடிந்து விடுமா?


ArGu
மார் 22, 2024 16:57

pudinga sir Pudichi jail la podunga sir


Sivasankaran Kannan
மார் 22, 2024 15:51

Stalin and Uday are so happy


Duruvesan
மார் 22, 2024 15:06

ஜெயில் கவிதை, பூங்காற்று திரும்புமா? ராசாவே வருத்தமா


Rengaraj
மார் 22, 2024 13:35

தினமும் வழக்கு விசாரணை நடக்க வேண்டும்


வீரபத்திரன்,கருங்காலக்குடி
மார் 22, 2024 13:09

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க?


Jysenn
மார் 22, 2024 12:54

Uppai tinnavargal tanneer kudippaargal Aadiya aattam yenna? Pesiya vaartthai yenna?Jai Sri Ram


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை