உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொரோனா பரவல் அதிகரிப்பு 841 பேருக்கு தொற்று உறுதி

கொரோனா பரவல் அதிகரிப்பு 841 பேருக்கு தொற்று உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : கொரோனா வைரஸ் பரவலால் ஒரு நாளில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, முந்தைய 24 மணி நேரத்தில் புதிதாக, 841 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நேற்று காலை நிலவரப்படி, அதற்கு முந்தைய, 24 மணி நேரத்தில், 841 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுஉள்ளது, பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது. ஒரு நாளில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 227 நாட்களுக்குப் பின் அதிகரித்துஉள்ளது. கடந்த, மே 19ம் தேதி, 865 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது.தற்போது, 4,309 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். முந்தைய, 24 மணி நேரத்தில், கேரளா, கர்நாடகா, பீஹாரில் தலா ஒருவர் என, மூன்று பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்புசாமி
ஜன 01, 2024 07:50

யாரும் பயப்பட வாணாம்.


Ramesh Sargam
ஜன 01, 2024 07:39

மீண்டும் கொரானா அச்சுறுத்தல். இந்தமுறை மக்கள் அந்தளவுக்கு பயப்படுவதாக தெரியவில்லை. அரசு, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து தொற்று பரவலை தடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை