உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகையின் கணவரின் ரூ. 100 கோடி சொத்துக்கள் முடக்கம்

நடிகையின் கணவரின் ரூ. 100 கோடி சொத்துக்கள் முடக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவின் ரூ.100 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.கடந்த2017-ம் ஆண்டு பிட்காயினில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவிகிதம் வட்டி வழங்கப்படும் என விளம்பரடுத்திய வேரியபில் டெக் லிமிடெட் நிறுவனம் நாடு முழுவதும் பொதுமக்களிடம் இருந்து ரூ.6,600 கோடி வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடியில் நடிகை ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வந்தது. வேரியபில் டெக் நிறுவனத்தின் நிர்வாகிகள் அமித் பரத்வாஜ், அஜய் பரத்வாஜ், விவேக் பரத்வாஜ், சிம்பி பரத்வாஜ், மகேந்தர் பரத்வாஜ் மற்றும் ஏஜென்ட்டுகள்மீது டில்லி மற்றும் மும்பையில் வழக்கு தொடர்ந்தது. இந்த மோசடியில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறை நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா ஆகியோர் பெயர்களில் மும்பை ஜுகு , புனே ஆகிய நகரங்களில் உள்ள ரூ.97.79 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

D.Ambujavalli
ஏப் 19, 2024 06:35

புழக்கடை வழியாகச் சென்று காலில் விழுந்து கண்ணீர் விடும் கலையறிந்த கோபாலபுரம், சி, ர சாலை எல்லாம் தப்பித்துக்கொண்டுவிடும்


Venkataraman
ஏப் 18, 2024 22:45

ராஜ் குந்தரா ஒரு ஏமாற்று பேர்வழி அவர் மேல் பல்வேறு மோசடி வழக்குகள் நடந்து வருகிறது ஷில்பா ஷெட்டி நேர்மையானவர்ஆனால் அவருக்கு தெரியாமல் அவருடைய கணவர் மோசடி வேலைகளில் ஈடுபட்டுள்ளார்


Bye Pass
ஏப் 19, 2024 02:57

அம்மணியின் சொகுசு வாழ்க்கைக்காக குறுக்கு வழியில் சம்பாதிக்கிறாரா ?


Bye Pass
ஏப் 18, 2024 20:13

கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் கிளுகிளு படப்புகழ் குந்திரா எல்லா வில்லங்க சமாச்சாரங்களிலும் சம்மந்தம் வெச்சுருக்காரே


Godfather_Senior
ஏப் 18, 2024 19:32

கருப்புப்பண முதலைகள் ஒவ்வொன்றாக கவனிக்கப்படுகின்றன இதில் எப்போ இந்த தமிழ்நாட்டு முதலைகள் பிடிபடும் என்று மக்கள் ஆவலாக காத்திருக்கின்றனர் அநேகமாக, தேர்தலுக்கு பிறகு ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் கோபாலபுரம் குடும்பத்திற்கு கேடு வரலாம் என்று எதிர்பார்க்கலாம்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை