மேலும் செய்திகள்
சபரிமலையில் ஜன.10 வரை தரிசன முன்பதிவு நிறைவு
3 hour(s) ago
ராகுல் கூட்டத்தை புறக்கணித்த சசி தரூர்
3 hour(s) ago
முஸ்லிம்கள் எனக்கு ஓட்டளிக்க மாட்டார்கள்!
4 hour(s) ago
1,000 ஆண்டு கோவிலை பாதுகாக்க வலியுறுத்தல்
4 hour(s) ago
தங்கவயல: நல்லுார், நத்தா ஆகிய தடுப்பணைகளை சீரமைக்கவும், படமாக்கனஹள்ளி ஹுனுகுந்தா தடுப்பணையை அகலப்படுத்தவும் கர்நாடக அரசு 7.60 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளதாக தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தெரிவித்தார்.தங்கவயல் எம்.எல்.ஏ., ரூபகலா, நேற்று முன்தினம் காலைபேத்தமங்களா ஏரியில் இருந்து வெளியேறும் நீரை தடுக்கும் நல்லுார் மற்றும் நத்தா தடுப்பணைகளை கிராம மக்களுடன் சென்று பார்வையிட்டார்.அப்போது அவர் கூறியதாவது:மழை அதிகளவு பெய்யும் போது, இப்பகுதியில் உள்ளவர்கள் நடமாட முடியவில்லை. தடுப்பணை விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது, என்று நீங்கள் தெரிவித்ததால், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.அதேபோல, படமாக்கன ஹள்ளி தடுப்பணையை அகலப்படுத்த வேண்டும் என்பதையும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு 7.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இதற்கான பணிகள், விரைவில் துவக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago