உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு மகப்பேறு மருத்துவமனையில் இந்திரா உணவகம் கட்டும் பணி துவக்கம்

அரசு மகப்பேறு மருத்துவமனையில் இந்திரா உணவகம் கட்டும் பணி துவக்கம்

தங்கவயல் : ராபர்ட் சன் பேட்டையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் இந்திரா உணவகம் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு உட்பட பல மாவட்டங்களில், இந்திரா உணவகம் திறக்கப்பட்டுள்ளது.குறைந்த விலையில் கிடைக்கும் உணவை கூலித் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் பலனடைந்து வருகின்றனர்.ஆனால், தங்கவயலில் தான் அதிகமான ஏழைகள் உள்ளனர் என்பதற்கான அடையாளமாக, வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கான ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.இங்கு மலிவு விலையில் விற்கப்படும் இந்திரா உணவகம் இல்லாத குறை இருந்து வந்தது. இதுகுறித்து பலர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.ராபர்ட் சன் பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் இந்திரா உணவகம் அமைக்க தொகுதி காங்கிரஸ்எம்.எல்.ஏ., ரூபகலா தலைமையில் நகராட்சி ஆணையர் பவன் குமார் மற்றும் அதிகாரிகள் இடத்தேர்வு செய்தனர்.இதற்காக பழைய கட்டடம் ஒன்றை தகர்த்தனர். சுற்றுச்சுவரையும் அகற்றினர். கட்டுமான வேலை துவக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை