மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
28 minutes ago
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவின் பதிலால் திருப்தி அடையாத பா.ஜ., - ம.ஜ.த., உறுப்பினர்கள், சட்டமேலவையில் வெளிநடப்பு செய்தனர்.சட்டமேலவையில் கவர்னர் உரை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் சித்தராமையா பேசுகையில், மத்திய அரசை கடுமையாக விமரிசித்தார்.அப்போது பா.ஜ.,வின் கோட்டா சீனிவாச பூஜாரி, தனக்கு பேச அனுமதி அளிக்கும்படி கோரினார்.இவ்வேளையில் சட்டமேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, “முதல்வர் பேசும்போது, அவ்வப்போது எழுந்து நின்று இடையூறு செய்கிறீர்கள். மீண்டும் பேசுவதில் அர்த்தம் இல்லை,” என கண்டித்தார்.பா.ஜ., - கோட்டா சீனிவாச மூர்த்தி: முதல்வர் தொடர்ந்து மூன்று மணி நேரம் பதிலளித்துள்ளார். மத்திய அரசு பற்றியும் பேசியுள்ளார்.இது முழுமையாக தேர்தல் பிரசார உரையாகும். மத்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.,வை குறிவைத்து விமர்சிக்கிறார். நாங்கள் பேசினால் தவறான செய்தி செல்லும்.கவர்னர் உரைக்கு பதில் அளித்திருந்தால், எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. வெறும் மத்திய அரசை முன்வைத்து விமர்சித்தால், நாங்கள் மவுனமாக இருக்க வேண்டுமா? பேச வாய்ப்பளியுங்கள்.இந்த கட்டத்தில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே, வாக்குவாதம் நடந்தது. பரஸ்பரம் குற்றம்சாட்டினர். முதல்வருக்கு ஆதரவாக அமைச்சர்கள், காங்., உறுப்பினர்கள் நின்றனர். 'மத்திய அரசு அநியாயம் செய்தும், நாங்கள் மவுனமாக இருக்க வேண்டுமா? முதல்வர் உண்மையை கூறியுள்ளார். எதிர்க்கட்சியினர் அதே விஷயத்தை மீண்டும் பேசுவதில் என்ன அர்த்தம் உள்ளது?' என, கேள்வி எழுப்பினர்.இதனால் மீண்டும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே வாக்குவாதம் நடந்தது. கொதிப்படைந்த பா.ஜ., உறுப்பினர்கள், அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும், மத்திய அரசை எதிர்த்து கோஷமிட்டனர்.
28 minutes ago
6 hour(s) ago | 5