உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மசோதா மீது முடிவெடுக்க கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

மசோதா மீது முடிவெடுக்க கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது டில்லி நிருபர்

மசோதாக்கள் மீது முடிவெடுக்க, கவர்னர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு கால வரம்பு நிர்ணயம் செய்த விவகாரத்தில் இன்று (நவ., 20) சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு அளித்தது. மசோதா மீது முடிவெடுக்க கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக கூறி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், 'மசோதாக்கள் மீது ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்' என, கவர்னர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு வரம்பு நிர்ணயித்து தீர்ப்பளித்தனர்.

விசாரணை

இந்த தீர்ப்பு குறித்து, 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தையே வழக்காக மாற்றிய தலைமை நீதிபதி கவாய், இதன் மீது ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என அறிவித்தார்.

தீர்ப்பு

அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்தது. கடந்த செப்., 11ல் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று (நவ.,20) ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

* சட்டசபைகளால் நிறைவேற்றப்படும் மசோதாவை கவர்னர் கால வரம்பின்றி நிறுத்தி வைக்க முடியாது. கவர்னர் நீண்ட காலமாக மசோதாவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.* அதே நேரத்தில் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், முடிவெடுக்க கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயிப்பது, அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது. * அரசியல் சாசனத்தின் 200வது பிரிவின்படி மசோதா மீது முடிவெடுக்க கவர்னருக்கு மூன்று வாய்ப்புகள் தான் உள்ளன. ஒப்புதல் அளிக்கலாம். அல்லது நிராகரிக்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம். நான்காவது வாய்ப்பு கிடையாது.* கவர்னர்களின் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது. அதே நேரத்தில் நீண்ட காலம் மசோதாவை கிடப்பில் வைத்திருந்தால் நீதிமன்றங்கள் ஆய்வு செய்ய முடியும்.* மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்களின் கருத்துக்களை கேட்க தேவையில்லை. வேண்டுமென்றால் மசோதா மீது நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டு கொள்ள முடியும்.* மசோதா மீது முடிவெடுக்க கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

raman
நவ 20, 2025 11:23

காலவரை நிர்ணயிக்க முடியாது என்று தீர்ப்பு.


Balasubramanian
நவ 20, 2025 11:22

அப்பாடி! காலம் தாழ்த்தினாலும் நிம்மதியான தீர்ப்பு - உண்மை உறங்காது! அடுத்தடுத்து மசோதாக்கள் அனுப்பி வைத்தவர்கள் உறக்கம் போச்சு!


vivek
நவ 20, 2025 11:20

சம்மட்டி அடி...பாவம் திராவிட சொம்புகள்....


N Sasikumar Yadhav
நவ 20, 2025 11:12

அதே போல ஊழல்வாதிகளுக்கு ஜாமின் கொடுக்காமல் விரைந்து விசாரித்து தீர்ப்பு கொடுக்கவேண்டும் ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் களவானிங்க பெரும்பாலோனோர் ஜாமினில் வெளிவந்து ஜாலியாக இருக்கிறார்கள்


சத்யநாராயணன்
நவ 20, 2025 11:11

சுய சிந்தனை இழந்த தேச விரோதிகளின் கைக்கூலியாக செயல்படும் உச்ச நீதிமன்றம் விரைவில் கலைக்கப்பட வேண்டும் இல்லையென்றால் இந்திய நாடு என்று ஒன்று இல்லாமல் செய்து விடுவார்கள் ஜனாதிபதிக்கு எதிராக தீர்ப்பு வழங்குவது என்பது மிகக் கொடுமையான விஷயம்


krishnamurthy
நவ 20, 2025 11:06

நிராகரிக்கப்பட்டதை அப்படியரு திரும்பவும் சட்டசபை அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் தரவேண்டுமா ?


Sudha
நவ 20, 2025 11:04

ஆனால் செந்தில் பாலாஜி கேஸ் மட்டும் போயிட்டே இருக்கலாம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை