உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெற்றோர் இல்லாத 3 சிறார்கள் பராமரிக்க முடியாமல் தவிக்கும் தாத்தா

பெற்றோர் இல்லாத 3 சிறார்கள் பராமரிக்க முடியாமல் தவிக்கும் தாத்தா

கோலார்: கோலார், சீனிவாசபுராவின், உனிகிலி லே அவுட்டில் வசிப்பவர் சின்னப்பா, 60. இவருக்கு பார்வை இல்லை. இவரது மகன் மஞ்சுநாத், 30. இவருக்கு திருமணமாகி, கவுதம், 7, என்ற மகனும் பூமிகா, 6, வருணா, 4, என்ற மகள்களும் உள்ளனர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன், மஞ்சுநாத்தின் மனைவி, கணவன், குழந்தைகளை விட்டு, கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டார். மஞ்சுநாத் பல இடங்களில் கடன் வாங்கியிருந்தார். கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்ததால், தலைமறைவாக நடமாடிய இவர், நாளடைவில் ஊரை விட்டே சென்று விட்டார்.தாய், தந்தையை இழந்து அனாதைகளான பிள்ளைகள், பார்வை தெரியாத தாத்தாவின் ஆதரவில் வளர்கின்றனர். இவர்களுக்கு வசிக்க வீடும் இல்லை. கிராமத்தினரே தற்காலிக ஷெட் கட்டிக் கொடுத்தனர். ஜன்னலோ, சுவரோ இல்லை. மண் தரையில் வசிக்கின்றனர்.தந்தை வீட்டை விட்டு சென்ற பின், பிள்ளைகள் சரியாக பள்ளிக்கும் செல்ல முடியவில்லை. வருவாய்க்கு வழியில்லை. அங்கன்வாடியில் வழங்கப்படும் உணவு தானியங்களை வைத்து, வாழ்க்கை நடத்துகின்றனர். அக்கம், பக்கத்தினர் உணவு கொடுத்து உதவுகின்றனர்.மூத்த பேரன் கவுதம், வாரம் ஒருநாளோ அல்லது இரண்டு நாட்களோ பள்ளிக்கு செல்கிறார். மற்ற நாட்களில் தாத்தாவுக்கு உதவியாக தம்பி, தங்கையை பார்த்துக்கொள்கிறார். தாத்தா கூறியபடி சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்கிறார்.'மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும், முதியவரின் குடும்பத்துக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும்' என, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை