உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைதிக்கும் மகிழ்ச்சிக்குமான திட்டம் இந்தியாவிடம் உள்ளது: மோகன் பகவத்

அமைதிக்கும் மகிழ்ச்சிக்குமான திட்டம் இந்தியாவிடம் உள்ளது: மோகன் பகவத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ‛‛அமைதிக்கும், மகிழ்ச்சிக்குமான திட்டம் இந்தியாவிடம் உள்ளதை கோவிட் காலத்திற்கு பிறகு உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன'', என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.

தோல்வி

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா என்ற இடத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது: சர்வதேச அளவில், கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் மகிழ்ச்சி மற்றும் அமைதி கிடைக்க செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளன. ஆனால், இந்த இரண்டும் இந்திய வாழ்க்கை முறையில் ஒருங்கிணைந்து உள்ளது. கோவிட் பரவலுக்கு பிறகு, அமைதிக்கும், மகிழ்ச்சிக்குமான திட்டம் இந்தியாவிடம் உள்ளதை உலகம் அறிந்துள்ளது.

இயற்கை மாறாது

சனாதன தர்மம் என்பது அரண்மனையில் இருந்து தோன்றியது இல்லை. அது ஆசிரமத்தில் இருந்தும், வனத்தில் இருந்தும் வந்தது. மனித நலனில் அக்கறை கொண்டது. காலம் மாறினாலும், நமது உடை மாறினாலும் இயற்கை எப்போதும் மாறாது.காலம் மாறும்போது, நமது பணியை தொடரவும், சேவை செய்யவும், நாம் புதிய வழிகளையும் முறைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கவனம்

வனப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அமைதியுடனும், இயற்கையுடன் இணைந்து வாழ்கின்றனர். இது பெரிய நகரங்களில் இல்லை. கண்களை மூடிக்கொண்டு கிராம மக்களை நாம் நம்ப முடியும். ஆனால், நகரங்களில் நாம் யாருடன் பேசுகிறோம் என்பதில் கவனமுடன் இருக்க வேண்டும்.

நாட்டின் நலன்

நாட்டின் எதிர்காலம் குறித்து ஒரு போதும் கவலை வேண்டாம். நாட்டின் நல்ல விஷயத்திற்காக பலர் உழைக்கின்றனர். நாமும் முயற்சி செய்கிறோம். இந்திய மக்கள் தங்களது சொந்த இயல்புகளை கொண்டுள்ளனர். பலர் எந்த பொருளுக்கும் புகழுக்கும் ஆசைப்படாமல் நாட்டின் நலனுக்காக பாடுபடுகிறார்கள். இது பலன்களை கொடுக்கும்.

மனம் ஒன்று

நம்மிடம் 33 கோடி கடவுள்கள், தெய்வங்கள் உள்ளதால், பல்வேறு வழிபாட்டு முறைகளை கொண்டு உள்ளோம். நமது நாட்டில் 3,800க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. உணவுப் பழக்கங்கள் கூட வேறுபட்டவை. வித்தியாசம் இருந்தாலும் நம் மனம் ஒன்றுதான். மற்ற நாடுகளில் இதை காண முடியாது.

முன்னேறுவோம்

மற்றவர்கள் நலனுக்காக உழைக்கும் போது, நாமும் முன்னேறுவோம். மனிதர்கள் தனியாக வாழ முடியாது. இறப்பை கண்டு அஞ்சியது கிடையாது. மனிதன் பூட்டிய அறைக்குள் தனித்து வாழ நேர்ந்தால் அவனுக்கு பைத்தியம் பிடித்து விடும். சேர்ந்து வாழும் போது தான், உணர்வுகள் ஒன்றுபடும்.

இலக்கு

சமூகத்திற்கு திரும்ப கொடுப்பது என்பது இந்திய கலாசாரத்தில் வேரூன்றி உள்ளது என்பதை முற்போக்காளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தற்போது நம்புகின்றனர். இது வேதங்களில் எங்கும் எழுதப்படவில்லை. ஆனால், தலைமுறை தலைமுறையாக நமது இயல்பில் அது இருக்கிறது. கிராமப் பணியாளர்கள் சமுதாய நலனுக்காக அயராது உழைக்க வேண்டும். வளர்ச்சிக்கு முடிவு உண்டா? நமது இலக்கை நாம் அடையும் போது, இன்னும் செல்ல வேண்டிய தூரம் உள்ளது நமக்கு புரியும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Raj
ஜூலை 19, 2024 09:41

First who are you? Have any power


K.n. Dhasarathan
ஜூலை 18, 2024 20:30

"மற்றவர்கள் நலனுக்கு உழைக்க வேண்டும் " என்று சொல்கிறார் மோகன் பகவத், அருமையான வார்த்தை, அதை அப்படியே உங்கள் சீடர்களுக்கு, முக்கியமாக பி.ஜே.பி.யினருக்கு சொல்லுங்கள். மக்களை ஏன் இப்படி வதைக்கிறார்கள்? நாட்டின் முதுகெலும்பு போன்ற விவசாயிகளுக்கு மோசமான சட்டத்தை கொண்டுவந்து, பிறகு உச்ச நீதி மன்றம் வரை சென்று பிறகு வாபஸ் வாங்கியது ஏன் ? இரண்டு வருடங்கள் வரை போராட விட்டு, அவர்களை சென்று பார்க்காமல், ஏன் என்றும் கேட்காமல் காலத்தை போக்கினார்கள். பிறகு எப்படி அமைதி, மகிழ்ச்சி ?


Mario
ஜூலை 18, 2024 19:15

அப்போ இதுவரை சொன்னது எல்லாம் பொய்யா கோபால்


hari
ஜூலை 18, 2024 21:41

ஒரு வாரம் லண்டன் டாஸ்மாக் போகாமல் இருந்தால் தெளிவு வரும் மறியோ


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 18, 2024 18:48

முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று சொல்வதை மோகன் பகவத் உட்பட அல்லது அவர் பேசியதை மொழிபெயர்ப்பு செய்தவர் தவறாக புரிந்துகொண்டு பேசுகிறோம். 33 கோடி என்பது 33 வகை என்றே பொருள்படும். இந்துக்களாகிய நாம் இயற்கையை, பூதங்களாக, தேவர்களாக, தேவதைகளாக புரிந்து கொண்டுள்ளோம். ஒவ்வொரு வகைக்கும் ஒரு தேவதா உரித்தானவர் என்றே பொருள்கொள்ள வேண்டும்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை