உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய முடியாது: உச்சநீதிமன்றம்

கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய முடியாது: உச்சநீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் பதவி நீக்கம் செய்ய முடியாது எனக்கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.டில்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.இந்த நிலையில் கெஜ்ரிவாலை பதவி நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், ''டில்லி முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய முடியாது. இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை'' எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர்
மே 13, 2024 17:03

மோடி மூன்றாவது முறை பிரதமர் பதவியேற்றவுடன் முதல் வேலையாக இந்த உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் போன்ற பழைய நடைமுறைகளை மாற்றி பாராளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி அதை செயல்படுத்த வேண்டும். அரசியல்வாதிக்கு ஒரு நீதி சாமானியனுக்கு ஒரு நீதி என்று இருந்தால் சாதாரண பாமர மக்களுக்கு நீதமன்றங்களின் மேல் எப்படி நம்பிக்கை வரும்? அவன் பிறகு எங்கே போய் நீதி கேட்க முடியும்? இப்போது இருக்கும் சூழ்நிலையில் பாதி பேருக்கு நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பிடிக்காமல் வெறுத்து போயிருக்கிறார்கள். எனவே பூனைக்கு யார் மணி கட்டுவது என்று காலம் தாழ்த்தாமல் இதற்கு விரைவில் ஒரு முடிவு காண்பது நாட்டுக்கும், இந்திய மக்களுக்கும் நல்லது.


Saai Sundharamurthy AVK
மே 13, 2024 16:57

கெஜ்ரிவால் வெளிநாட்டு சக்திகளின் துணையுடன் செயல்படும் ஒரு கிரிமினல். முதலமைச்சர் பதவியை பறிக்க தலையிட முடியாது என்றால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரியில்லை என்று அர்த்தம். ஏதோ தவறு நடக்கிறது. வெளிநாட்டு சக்திகளுடன் கை கோர்த்திருப்பதாக தெரிகிறது. எதிர்க்கட்சிகள் நீதித்துறையை பயன்படுத்தி குறுக்கு வழியில் இந்தியாவின் இறையாண்மையை முடக்க சதி செய்வதாக தெரிகிறது.


J.V. Iyer
மே 13, 2024 16:40

இவர்கள் சட்டத்திற்கு மேலானவர் என்று நீதிபதிகள் கருதுகிறார்போலும்


vijay
மே 13, 2024 16:36

பேசாமல் நீதிமன்றமே அவரை தேர்தல் இல்லாமலேயே நாட்டின் பிரதமராக அமர்த்திவிடலாம் அதற்குத்தான் ஆசைப்பட்டார்


R Kay
மே 13, 2024 16:07

நீதித்துறையை கட்டுப்படுத்த வேண்டும் அதன் அதிகார எல்லை வரம்பு மீறி சென்று கொண்டிருக்கிறது ஊழல், நிர்வாக சீர்கேடு, மோசமான சட்டம் ஒழுங்கு போன்ற காரணங்கள் இருப்பின் மாநில அரசுகளை கலைப்பது ஒன்றும் தவறல்ல அவ்வாறு செய்யாமல் விட்டு வைத்ததன் பலன்


Kasimani Baskaran
மே 13, 2024 15:34

தண்டனையை நிறுத்தி வைத்துவிடலாமே


Kasimani Baskaran
மே 13, 2024 15:16

தேர்தல் வரை சிறைக்கும், நீதித்துறைக்கும் விடுமுறை என்று சொல்லிவிட்டால் பிரச்சினை தீர்ந்தது கிரிமினல்களுக்கும் கூட வாக்குரிமை உண்டுதானே


Lion Drsekar
மே 13, 2024 14:47

நினைத்த நேரத்தில் முன்பு பரம்பரையாக ஆண்ட மாமன்னர்கள் காலங்களில் ஆட்சி கலைத்தல் இருந்தது அப்போது இந்த நீதியரசர்கள் இல்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது பாமரனாய் ஒரு கேள்வி? தவறு செய்பவர்களைக் கைது செய்யவே கூடாதா? அப்படி என்றால் எதற்கு அந்த துறைகள், அவர்களை வேறு வேலைக்கு பணியமர்த்தினால் நன்றாக இருக்குமே தேவை இல்லாமல் அவர்களுக்கும் எதற்க்காக இரவு பகல் பாராமல் கண்விழித்து, தவறுகளை கண்டுபிடித்து, கைது செய்து, இவைகள் எல்லாமே சமுதாயத்தில் தவறு செய்பவர்களுக்கு ஒரு இலவச விளம்பரமாகிறது மேலும் அரசியல் கட்சிகளுக்கு மட்டும் தான் இந்த சலுகைகளா எங்களுக்கும் அதே போன்று சலுகைகள் கொடுக்கவேண்டும் என்று திருடர்கள், கொலைகாரர்கள், கொள்ளையர்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் காலம் வந்து விடும், அவரவர்களுக்கு அவையவைகள் முழுநேர தொழில்தான் இந்த கேள்வியை எல்லா பாமரர்களும் மனதிலும் ஆழமாக ஒலித்துக்கொண்டு இருக்கும் ஒரு வெளிக்கொண முடியாத கேள்வி, வந்தே மாதரம்


Natarajan Ramanathan
மே 13, 2024 14:45

மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங் ஜெயிலில் இருந்தபோது அவர் அம்மா இறந்துவிட்டார் இறுதி சடங்குகளில் கலந்துகொள்ளகூட அவருக்கு பெயில் தராத இந்த சுப்ரீம் கோர்ட் இந்த ஊழல்க்கு பெயில் கொடுப்பது ரொம்பவே அநியாயம் நீதிபதிகள் வளமாக வாழ்வது எப்படி என்று இப்போது தெரிகிறது


h
மே 13, 2024 14:39

judiciary lying


மேலும் செய்திகள்