உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் மகன் சேர தாய் தூண்டுதல்: பாய்ந்தது உபா சட்டம்

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் மகன் சேர தாய் தூண்டுதல்: பாய்ந்தது உபா சட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: முதல் கணவனுக்கு பிறந்த 16 வயது மகனை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர வலியுறுத்திய கேரள தாய் மற்றும் இரண்டாவது கணவன் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.கேரள மாநிலம் பத்தினம் திட்டாவை சேர்ந்த ஒரு பெண், முதல் கணவரை பிரிந்து இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து லண்டனில் வசிக்கிறார். முதல் கணவருக்கு பிறந்த 16 வயது மகன் தாய் வீட்டுக்கு சென்று இருக்கிறான். அப்போது அவனிடம் தாய் மற்றும் அவரது இண்டாவது கணவன் (காதலன்) ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் சில வீடியோக்களை காண்பித்து சேர வலியுறுத்தி இருக்கின்றனர்.பின்னர் கேரளா திரும்பிய 16 வயது மகன் நடவடிக்கையில் சில மாற்றங்கள் தெரிவித்துள்ளது. இதை அறிந்த அவனது ஆசிரியர் மாணவனின் உறவினரிடம் தகவல் தெரிவித்து உள்ளார். பின்னர் சிறுவனை அவனது சித்தப்பா கேரள போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து புகார் அளித்தார். விசாரித்த போலீசார், 16 வயது மகனை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர வலியுறுத்திய கேரள தாய் மற்றும் அவரது காதலன் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை அந்த பெண் மறுத்துள்ளார். இந்த வழக்கு குடும்ப தகராறு தொடர்பான பிரச்னைகளை உள்ளடக்கியதால் போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை