உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மண்ணுக்குள் புதைந்த முண்டக்கை, சூரமலை நகரங்கள்: பேர் சொல்லக்கூட ஊர் இல்லை

மண்ணுக்குள் புதைந்த முண்டக்கை, சூரமலை நகரங்கள்: பேர் சொல்லக்கூட ஊர் இல்லை

வயநாடு: சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடமாக இருந்த வயநாட்டின் முண்டக்கை மற்றும் சூரமலை பகுதிகள், நிலச்சரிவு காரணமாக இடிந்த கட்டடங்கள், சேறு நிறைந்த பள்ளங்கள், பாறைகள் நிறைந்த விரிசல் நிலமாக காணப்படுகிறது. இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கி உள்ளனரா என அவரது உறவினர்கள் தேடி வருகின்றனர்.வயநாட்டின் முண்டக்கை மற்றும் சூரமலை ஆகிய நகரங்கள் மக்கள் நடமாட்டம் காரணமாக கடைகள் மற்றும் கான்கிரீட் கட்டமைப்புகளால் சூழ்ந்து காணப்பட்டது. உட்புற தோற்றம் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் பெற்ற சூரமலா, சுற்றுலா பயணிகளின் விருப்ப தலமாக இருந்தது. இங்குள்ள சூச்சிபாரா நீர்வீழ்ச்சி வெள்ளொளிப்பாறை மற்றும் சீதா ஏரி ஆகியவை விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.ஆனால், நிலச்சரிவு காரணமாக நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. முற்றிலும் சேறும் சகதியுமாக காணப்படும் இந்நகரங்களில், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாறைகள் ஆங்காங்கே கிடக்கின்றன. பல வாகனங்கள் சேதமடைந்து பாறைகளுக்கு இடையே சிக்கி காணப்படுகிறன. ஏராளமான வீடுகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. அதற்கு இடையில் யாரேனும் காயங்களுடனோ, இறந்த நிலையிலோ உள்ளனரா என அவர்களது உறவினர்கள் ஏக்கத்துடன் தேடி வருவது பார்ப்பவர்கள் மனதில் சோகத்தை ஏற்படுத்துகிறது. அவர்களது மனதிலும் ஒரு நிச்சயமற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.முண்டக்கை பகுதியில் 450 - 500 வீடுகள் வரை இருந்ததாக தகவல் ஒன்று வெளியான நிலையில், தற்போது 34 - 49 வீடுகள் மட்டுமே உள்ளதாக தெரிகிறது.குடும்பத்தை இழந்த முதியவர் ஒருவர் கூறுகையில், நாங்கள் அனைத்தையும், அனைவரையும் இழந்துவிட்டோம். எங்களுக்கு என்று எதுவும் இங்கு இல்லை என்றார்.மற்றொருவர் கூறுகையில், ‛‛ வயநாடு வரைபடத்தில் இருந்து முண்டக்கை துண்டிக்கப்பட்டு உள்ளது. இங்கு சேறு மற்றும் பாறைகளை தவிர எதுவும் இல்லை. இந்த சகதிகளுக்கு மத்தியில் நடக்கக்கூட முடியவில்லை. அப்படி இருக்கையில், மண்ணில் புதைந்தவர்களை எப்படி தேட முடியும்'' என கண்ணீருடன் கூறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Natchimuthu Chithiraisamy
ஆக 10, 2024 12:35

அணைத்து இடங்களும் மனிதனுக்கு சொந்தமில்லை. பல உயிர்கள் வாழ்கின்றன. இனி இந்த இடத்தை விலங்குகளுக்கு கொடுத்துவிடுங்கள். பாவம் அதுவும் வாழட்டும்.


Ramesh Sargam
ஜூலை 31, 2024 22:02

இயற்கையின் சீற்றம் ஒரு காரணமாக இருந்தாலும், கேரளா அரசின் அலட்சியமும் ஒரு காரணம் இந்த பாதிப்புக்கு. ஆம், கேரளா அரசு மத்திய அரசின் வெள்ள எச்சரிக்கையை செவிமடுக்கவில்லை.


M L SRINIVASAN
ஜூலை 31, 2024 17:23

பாவம்


Swaminathan L
ஜூலை 31, 2024 17:22

மிக மோசமான அழிவு மட்டுமல்ல, இயற்கையின் கடும் எச்சரிக்கையும் கூட. அப்பட்டமான, இயற்கையைக் துளியும் மதிக்காத நுகர்தலின் விளைவு இந்த பெருஞ்சோக நிகழ்வு. உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம் வரிசையில் கேரளா சேர்ந்தாகி விட்டது. தமிழகம் விழித்துக் கொள்ளாவிடில் ஊட்டி, நீலகிரி பகுதிகள் இதே அபாயத்தைச் சந்திக்க நேரலாம்.


Ram pollachi
ஜூலை 31, 2024 16:58

அழகு என்றுமே ஆபத்து என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்... வட்டிக்கு பணம் கொடுத்து வரவு செலவு செய்தவர்களின் நிலை படு மோசமாகிவிடும். கடந்த மழை வெள்ளம் காரணம் காட்டி பல கோடிகளை இழந்த நம்மவர்களுக்கு மீண்டும் மீண்டும் இழப்பு.


S S
ஜூலை 31, 2024 16:54

ஆழ்ந்த அனுபதாங்கள். அரசு இந்த சம்பவம் நடைபெறாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்


Venkatesh
ஜூலை 31, 2024 16:44

கொஞ்சம் harshஆன கமெண்ட் ஆக இருந்தாலும், சொல்லாமல் இருக்க முடியவில்லை.... எல்லை மீறிய செயல்கள், இறைவனாலேயே பொறுத்துக் கொள்ள முடியவில்லை....


Palanisamy Sekar
ஜூலை 31, 2024 16:24

ஆள்வோர் தேசபக்தியுடனோ அல்லது தெய்வீக நம்பிக்கையுடனோ இல்லை என்றால் மக்கள் அவதிப்படுவார்கள் என்கிறது இதிகாசங்கள். மத நம்பிக்கையை தகர்த்து மத நம்பிக்கை உள்ளவர்களை மனதை நோகடித்தால் அந்த சாபமானது வேடிக்கை பார்க்காது. தமிழகத்தில் கூட பாருங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போதையில் மக்கள் தள்ளாடுகின்றார்கள். சாப்பாடு கூட இல்லாமல் இருப்பார்கள் போலும் ஆனால் மது அருந்தாமல் அவர்களால் இருக்க முடியவில்லை. பள்ளி சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவதை காண்கின்றோம். காரணம் தவறான மனிதர்களை தேர்வு செய்த மக்கள் இதுபோன்ற பாவங்களால் துன்புற்றே ஆகணும் என்பது கர்மா.. பாவம் மக்கள்


Training Coordinator
ஆக 01, 2024 06:11

அப்படியே இருந்தாலும் உத்தராகண்டம் மாநிலத்தில் ஏன் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்படுகிறது? அங்கேயே ஆளும் கட்சி தெய்வக் குத்தத்திற்கு ஆளாகி உள்ளதோ?


Barakat Ali
ஜூலை 31, 2024 16:02

சாபம் ..........


rsudarsan lic
ஜூலை 31, 2024 17:04

Seems to beca BJP plot. Let Rahul and Priyanka visit and find out more truth and rock the nation


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி