உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக அரசியலால் ஹிந்தியை கற்க முடியவில்லை: அமைச்சர் முருகன் வேதனை

தமிழக அரசியலால் ஹிந்தியை கற்க முடியவில்லை: அமைச்சர் முருகன் வேதனை

வாரணாசி: ''ஹிந்தியை கற்பது என் உரிமை. ஆனால், தமிழகத்தில் நிலவும் அரசியலால் என்னால் கற்க முடியவில்லை. டில்லிக்கு வந்த பிறகே ஹிந்தியை கற்றேன்,'' என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது ஆண்டு நிகழ்ச்சி நேற்று முன்தினம் துவங்கியது. காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான கலாசார பிணைப்பை பறைசாற்றும் வகையில், மத்திய பா.ஜ., அரசால் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: தமிழகத்தில் நிலவும் அரசியலால் ஹிந்தியை என்னால் கற்க முடியவில்லை. டில்லிக்கு வந்த பிறகே அதை கற்றுக் கொண்டேன். எனக்கு கொஞ்சம் தான் ஹிந்தி தெரியும். ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும். இங்கு அரசியல் பேச நான் விரும்பவில்லை. ஆனால், தமிழகத்தில் ஹிந்தி கற்க ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? ஹிந்தியை கற்பது என் உரிமை. ஆனால் அந்த உரிமை தமிழகத்தில் மறுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். தேசிய கல்விக் கொள்கையின் கீழ், தாய்மொழி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக, விரும்பும் மொழியை மாணவர்கள் கற்கலாம். ஆனால், தமிழகத்தில் ஆளும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு, மூன்றாவது மொழியாக ஹிந்தியை திணிக்கும் முயற்சி எனக் கூறி, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பா.ஜ.,வுடன் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.,வும், இரு மொழி கொள்கையே எனக் கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை