உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடும்ப தலைவியின் பணிகளை பணத்தால் மதிப்பிட முடியாது

குடும்ப தலைவியின் பணிகளை பணத்தால் மதிப்பிட முடியாது

புதுடில்லி, 'ஒரு குடும்பத் தலைவியின் பணிகளை பணத்தால் மதிப்பிட முடியாது. வேலை செய்யும் பெண்களைவிட, குடும்பத் தலைவியின் பணிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.உத்தரகண்டைச் சேர்ந்த ஒரு பெண் சாலை விபத்தில் உயிரிழந்தார். இழப்பீடு கேட்டு அவருடைய கணவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, மோட்டார் வாகன சட்டத் தீர்ப்பாயம், இந்தப் பெண், குடும்பத் தலைவியாக உள்ளதால், தினசரி கூலி வேலை செய்வோர் ஈட்டும் வருவாயைவிட குறைந்த தொகையை இழப்பீடாக அறிவித்தது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், அதை உறுதி செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிபதிகள் சூரியகாந்த், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கூறியதாவது: வீட்டு வேலைகளை கவனிக்கும் பெண்கள் மிகவும் உயர்வானவர்கள். அவர்களது பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது; அதை பணத்தால் மதிப்பிடவும் முடியாது.வேலைக்குச் செல்லும் பெண்களைவிட, குடும்பத் தலைவியின் பணிகள் குறைந்தது அல்ல. அவர்கள் குடும்பத்துக்காக செலவிடும் நேரத்தை, பணத்தால் கணக்கிட இயலாது. அது மதிப்பிட முடியாத பங்களிப்பாகும்.இந்த விஷயத்தில், தினக்கூலி வேலை செய்பவர்களைவிட குறைந்த அளவுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. அந்தப் பெண், குடும்பத் தலைவிதான் என்று கூறப்பட்டுள்ளதையும் ஏற்க முடியாது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.இதையடுத்து, அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட, இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீட்டை, ஆறு லட்சம் ரூபாயாக உயர்த்தி, அமர்வு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

vbs manian
பிப் 18, 2024 09:00

ஒரு இடத்தில ஆயிரம் ரூபாய் மதிப்பு.


Ramesh Sargam
பிப் 18, 2024 07:55

சிறப்பான தீர்வு. தீர்ப்புக்கள் இப்படி இருக்கவேண்டும். அப்பத்தான் நீதிமன்றத்தின் மீது மக்கள் நம்பிக்கை அதிகரிக்கும். ஆனால், நீதிமன்றங்களுக்கு இடையே ஏன் இப்படி தீர்ப்பு வழங்குவதில் வேற்றுமை? ஒன்று நிராகரிக்கிறது. மற்றொன்று ஆதரிக்கிறது. சட்டத்தை எந்தக்கோணத்தில் இவர்கள் பார்க்கிறார்கள். தலை சுத்துது.


g.s,rajan
பிப் 18, 2024 07:43

சபாஷ் ,சரியான தீர்ப்பு .....


Duruvesan
பிப் 18, 2024 07:14

உண்மை. மனைவி இல்லைனா finance management for family running நினைத்து paarka முடியாது. என்னோட வேலை சம்பாதிச்சி சம்பளம் மனைவிகிட்ட குடுப்பது, அதுல மிச்சம் பண்ணி MF sip போட்டு 15 வருஷத்தில் நல்ல அமௌன்ட் சேர்த்து வெச்சி இருக்காங்க. Kudos to all family head ladies


Kasimani Baskaran
பிப் 18, 2024 06:46

அந்த காப்பீட்டு நிறுவன தலைமை அதிகாரியின் மனைவியை ஒரு வருடத்துக்கு பாதிக்கப்பட்டவரின் வீட்டு வேலைகளை முழுமையாக செய்யச்சொல்ல வேண்டும் - இல்லை என்றால் அவர்களால் இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாது.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 18, 2024 10:23

காப்பீட்டு நிறுவனம் மனசாட்சியைக் கொன்று புதைக்க வேண்டிய நிலைமை ......


R S BALA
பிப் 18, 2024 06:41

சிறப்பான தீர்ப்பு..


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை