உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இளநிலை நீட் தேர்வில் பெரிய அளவில் ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், முழு தேர்வையும் ரத்துசெய்வது நியாயமானதாக இருக்காது. தேர்வை ரத்து செய்யக் கூடாது,' என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மே 5ம் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த மாதம் 4ம் தேதி வெளியிடப்பட்டது. வினாத்தாள் கசிவு, 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட சர்ச்சைகளால் மறு தேர்வுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர். அதன்பேரில் மத்திய அரசுக்கும், தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமைக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.இன்று (ஜூலை 5) நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், தேர்வில் பெரிய அளவில் ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், முழு தேர்வையும் ரத்துசெய்வது நியாயமானதாக இருக்காது. தேர்வை முற்றிலுமாக ரத்துசெய்வது, இந்தாண்டு தேர்வெழுதிய லட்சக்கணக்கான நேர்மையான விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்படுவர். எனவே நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது.சதி, ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்தல், நம்பிக்கை மீறல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக முழு விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களை கொண்டுவர உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு ஜூலை 8ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

E Sreekanth
ஜூலை 06, 2024 10:15

டாக்டர் படிப்பு படித்தவர்கள், நோயாளிகளின் மொழியிலேயே நோயாளிகளிடம் ஆலோசனை கூற வேண்டும். அதை விடுத்து மாற்று மொழி உபயோக படுத்தும்மாநிலத்தில் படித்தால் எப்படி மொழிதெரியாமல் ஆலோசனை கூறுவார்கள். ஆகையால் அவரவர் மொழியுள்ள மாநிலத்தில் நீட் மாதிரி பொது தேர்வு நடத்தி அதில் அந்த அந்த மாநில மாணவர்களை மட்டும் அந்தந்த மாநில மருத்துவ கல்லூரியில் சேர்க்க வேண்டும். இதில் மொழி பிரச்சனை வராது. மாணவர்களின் தரமும் உயரும்.


சித்தறஞ்சன்
ஜூலை 06, 2024 07:22

ஆம் நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே.


தாமரை மலர்கிறது
ஜூலை 06, 2024 00:36

நீட் தேர்வு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதை தடுக்க சுப்ரிம் கோர்ட்டுக்கு அதிகாரம் கிடையாது.


M Ramachandran
ஜூலை 05, 2024 20:04

நீதி மன்றம்னுதெரிவித்த கருத்திற்கு எதிராக சிலரை தூண்டி விட்டு அதில் குளிர் காய்கிறார்கள்


M Ramachandran
ஜூலை 05, 2024 20:02

தேர்தெடுத்த பிரிநிதிகள் மக்களுக்கு சேவை செய்வதை விட்டு வீராப்பயும் சபைய்ய மாண்பைய்ய காக்கா தவறியவர்கள் சட்ட புறம்பான பணமீட்டுதல் வேலை செய்யவும் தயங்கமாட்டார்கள்


GMM
ஜூலை 05, 2024 19:45

உச்ச நீதிமன்ற அதிகாரம் சட்ட தாவா தீர்க்கும் இடம். ரத்து செய்ய கூடாது என்று மத்திய அரசு தன் அதிகாரம் புரியாமல், பிராமண பத்திரம் தாக்கல் செய்தது, பாராளுமன்ற / நிர்வாக நடைமுறை பற்றி ஆளும் பிஜேபிக்கு இன்னும் புரிய முடியவில்லை. ஒரு இடத்திற்கு பல பேர்கள் விரும்பும் போது, போட்டி தேர்வு தவிர்க்க முடியாது. மக்கள் தாவா தீர்க்க தான் நீதிமன்றம். அரசை அதிகாரம் மூலம் வழக்கறிஞர் தவறான வாதம் கேட்டு முடக்க அனுமதிக்க கூடாது.


Venkat
ஜூலை 05, 2024 19:32

சர்ச்சை மேல் சர்ச்சை மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வில் எதற்கு இந்த கூத்து? இதன்பின் கண்டிப்பாக பெரிய அரசியலும் வியாபாரமும் ஒளிந்திருக்கிறது ஹா.. சும்மாக ஒன்றிய அரசு ஒன்னும் முட்டுக்கொடுக்காது


Dharmavaan
ஜூலை 05, 2024 20:22

ரகசியம் மருத்துவ கல்லூரி நன்கொடை கொள்ளை


M Ramachandran
ஜூலை 05, 2024 19:25

புதிய சட்டம் மூலம் தண்டன்னயும் கடுமையாக்க பட்டுள்ளன


vbs manian
ஜூலை 05, 2024 19:05

கல்வி தந்தை என்னும் பணமுதலைகள் செய்த சதித்திட்டம். கோடிக்கணக்கில் வருமானம் இழப்பு. மல்லுக்கு நிற்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை