உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜன்தன் கணக்கிற்கு மினிமம் பேலன்ஸ் கிடையாது

ஜன்தன் கணக்கிற்கு மினிமம் பேலன்ஸ் கிடையாது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''ஜன்தன் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.கடந்த ஐந்து ஆண்டுகளில், 'மினிமம் பேலன்ஸ்' எனப்படும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக, வாடிக்கையாளர்களிடம் இருந்து, பொதுத் துறை வங்கிகள், 8,500 கோடி ரூபாய் அபராதம் வசூலித்ததாக, பார்லிமென்டில் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ராஜ்யசபாவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ''வங்கிக் கணக்குகள் இல்லாதவர்களுக்கு நிதிச் சேவைகளை வழங்குவதற்காக துவங்கப்பட்ட ஜன்தன் யோஜனா மற்றும் ஏழை மக்களுக்கான அடிப்படை சேமிப்பு திட்ட கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மற்ற வகையான கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கவில்லை என்றால் மட்டுமே வங்கிகள் அபராதம் விதிக்கின்றன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

S.Martin Manoj
ஆக 07, 2024 15:34

ஜன்தன் வங்கி கணக்கு 2014 க்கு பிறகு வந்தது அதற்கு முன் துவக்கிய சாதாரண சேமிப்பு கணக்கிற்கு எதற்காக மினிமம் பேலன்ஸ், வருடம் ஒருமுறை பராமரிப்பு கட்டணம் பிடித்து கொண்டுதானே இருக்கிறார்கள், ஏழைகளிடம் கொள்ளையடித்து பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் கொடுமையான ஒன்றிய அரசு


MADHAVAN
ஆக 07, 2024 12:07

பொருளாதாரத்தை பற்றி ஒன்னும் தெரியாது....


ஆரூர் ரங்
ஆக 07, 2024 13:49

உமக்குத் தானே?


MADHAVAN
ஆக 07, 2024 12:01

எந்த அக்கவுண்டா இருந்தாலும் பணம் போவது உறுதி


ஆரூர் ரங்
ஆக 07, 2024 11:50

சாமானியர்கள் மட்டுமே கணக்கு வைத்திருக்கும் தமிழக அரசின் மத்திய TNSC கூட்டுறவு வங்கியில் சேவிங்ஸ் கணக்குக்கு கட்டாய. மினிமம் பேலன்ஸ் ஆயிரம் ரூபாய் . கரண்ட் அக்கவுண்ட் 3000 ரூபாய் உண்டாம். உ.பி ஸ் யாரும் இதனைப் பற்றி பேச மாட்டார்கள்.


ஆரூர் ரங்
ஆக 07, 2024 11:39

வங்கியில் கணக்கைத் துவக்கும்போதே மினிமம் பேலன்ஸ் விதிகளைக் காட்டி ஒப்புதல் பெறுகிறார்கள். அப்போது கையெழுத்து போட்டுவிட்டு பிறகு எதிர்த்துக் கேள்வி கேட்பது நியாயமற்றது. பிடிக்காதவர்கள் மினிமம் பேலன்ஸ் வைக்கத் தேவையற்ற சிறிய SMALL FINANCE வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளில் மினிமம் பேலன்ஸ் முறை உள்ளது.


vbs manian
ஆக 07, 2024 10:53

மினிமம் பாலன்ஸ் இல்லையென்றால் வங்கிகளுக்கு என்ன நஷ்டம். கோடி கணக்கில் லாபம் வருகிறதே.


ஆரூர் ரங்
ஆக 07, 2024 11:40

ஒஷியின்றி வாழ்வது நம்மவர்களுக்கு கஷ்டம்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 07, 2024 10:08

பாஜக தனிப்பெரும்பான்மை பெறாததற்கு ஸ்ம்ருதி இராணி, நிர்மலா சீதாராமன் போன்ற பெண்மணிகளே காரணம் ......


பச்சையப்பன் கோபால் புரம்
ஆக 07, 2024 10:05

அப்போ அந்த பாஞ்சு லட்சம் கிடையாதா?!


Kumar Kumzi
ஆக 07, 2024 12:09

முதலில் ஹிந்தி படிச்சிட்டு மோடி பேசிய காணொளியை கேட்டு பார்


Sampath Kumar
ஆக 07, 2024 09:32

வங்கிகள் தங்களது இஷ்டத்துக்கு விதி முறையாய் மாற்றி மக்களிடம் பணம் வசூலிக்கிறார்கள் அதில் ஓன்று தான் மினிமம் பாலன்ஸ் இதை ராகுல் பேசிய பிறகே ஆத்தா திருவாய் மலர்ந்து கூறி உள்ளது


vbs manian
ஆக 07, 2024 09:12

மற்ற வாங்கி கணக்குகளில் மட்டும் ஏன் இந்த மினிமம் பாலன்ஸ் உபத்திரவம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை