உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தோட்டத்தில் மயில்கள் மர்ம சாவு விஷம் கொடுத்து வேட்டை?

தோட்டத்தில் மயில்கள் மர்ம சாவு விஷம் கொடுத்து வேட்டை?

பெலகாவி: கரும்புத் தோட்டத்தில் மயில்கள் மர்மமான முறையில் இறந்துகிடந்தது தெரிய வந்தது. இவை விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.பெலகாவி, சிக்கோடியின், மாஞ்சரி கிராமத்தின் புறநகரின் கரும்புத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் எட்டு மயில்கள் இறந்து கிடந்தன. நேற்று காலை மயில்கள் இறந்துகிடப்பதைக் கண்ட கிராமத்தினர், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு வனத்துறை அதிகாரிகள், மயில்களை மீட்டு, பரிசோதனைக்கு அனுப்பினர். விஷம் வைத்து அவை கொல்லப்பட்டிருக்கலாம் என, அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.இது தொடர்பாக, அங்கலி போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகி, விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி