உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛‛என்னை எம்.பி.,யாக்க விரும்பும் அமேதி மக்கள்: பிரியங்கா கணவருக்கும் அரசியல் ஆசை

‛‛என்னை எம்.பி.,யாக்க விரும்பும் அமேதி மக்கள்: பிரியங்கா கணவருக்கும் அரசியல் ஆசை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நான் எம்.பி., ஆக விரும்பினால், அமேதியில் இருந்து தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் விரும்புகின்றனர் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கணவர் ராபர்ட் வாத்ரா கூறியுள்ளார்.லோக்சபா தேர்தலில் வேட்பாளர்களை அறிவித்து வரும் காங்கிரஸ் கட்சி,உ.பி.,யின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் தோல்வியடைந்தார். இந்த முறை ராகுல் மீண்டும் அமேதியில் போட்டியிட வேண்டும் என காங்கிரசார் வலியுறுத்துகின்றனர். ரேபரேலியில் பிரியங்கா போட்டியிடுவார் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில், பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா கூறியதாவது: ‛‛ நான் எம்.பி., ஆக விரும்பினால், அமேதியில் இருந்து தான் வெற்றி பெற வேண்டும் என அப்பகுதி மக்கள் விரும்புகின்றனர். பல ஆண்டுகளாக ரேபரேலி, அமேதி மற்றும் சுல்தான்பூர் பகுதிக்கு நேரு குடும்பத்தினர் பல பணிகளை செய்துள்ளனர். தற்போதைய அமேதி எம்.பி.,யால் அமேதி மக்கள் இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். அவரை தேர்வு செய்து தவறு செய்துவிட்டதாக வருந்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Rajasekar Jayaraman
ஏப் 05, 2024 14:13

சீக்கிரம் நிறுத்துங்க ராபர்ட் வாத்ராவை தேர்தல்ல.


Lion Drsekar
ஏப் 05, 2024 13:58

இவரைப்பார்த்தாலே பயமாக இருக்கிறதே இவரை மக்கள் எளிதாக அணுகி ஏதாவது கேட்கமுடியும் அளவுக்கு இருப்பாரா ? வந்தே மாதரம்


தாமரை மலர்கிறது
ஏப் 04, 2024 22:53

மக்கள் விரும்பவில்லை மாமியாரும் பொண்டாட்டியும் விரும்புறாங்க


Nagarajan D
ஏப் 04, 2024 21:30

எந்த பதவியும் இல்லாமலே நீங்க அடித்த கொள்ளையே கணக்கில் அடங்காது நீங்க பாராளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டால் ஊரையே உலையில் போட்டு மாமியார் குடும்பத்தையே மிஞ்சிவிடுவீர்.


Balasubramanyan
ஏப் 04, 2024 21:03

ஷாமேல்ஸ் ffellowswallowed hectares of poor people land Why he has been called several times for interrogation So all sonia family wants to live on govt money MP SALARY, PERKS, AND FREE HOUSE , AND EASY WEY TO SWINDLE MONEY


Ramesh Sargam
ஏப் 04, 2024 19:51

ஆம், இராணிக்கு எதிராக போட்டியிட்டு நீ தோல்வி அடைவதை பார்க்க மக்கள் விரும்புகின்றனர்.


தமிழ்வேள்
ஏப் 04, 2024 19:47

எம்பி ஆக இல்லாமல் இருந்தபோதே ஊழல் ஓவர் டிஎல்எஃப் கதை சந்தி சிரிக்க வைத்தது இவர் எம்பி ஆனால் ஊழல் இன்னும் அதிகமாக ஆகும் பாரதீயர்களின் வியர்வை சிந்தி ஈட்டிய பொருள் வாட்டிகனுக்கு அள்ளி விடப்படும் இவர் தேவையே இல்லாத ஆணி.


Kumar Kumzi
ஏப் 04, 2024 19:41

அமேதி எங்க ஈரான்ல இருக்குனு நெனச்சிட்டானோ ஹாஹாஹா


sankaranarayanan
ஏப் 04, 2024 19:30

மாப்பிள்ளைக்கும் மச்சானுக்கும் போட்டியா சரியான போட்டிதான் இருவருமே மண்ணை காவ்வுவார்கள்


Godfather_Senior
ஏப் 04, 2024 18:40

ஆஹா என்னே மக்கள்மீது இவர்களுக்கு பாசம் ஆனால் அமேதி மக்கள் நிச்சயமா காங்கிரஸ் வேட்பாளார்களை தோற்கடிப்பதில் மிகவும் தீவிரமாக உள்ளனர் என்பதை அறியாத மடையர் தான் இப்பிடியெல்லாம் தன்னை உயர்த்தி பேசுவர்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை