உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5 ஆண்டுக்கான திட்டங்களை தயாரிக்க அமைச்சர்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்

5 ஆண்டுக்கான திட்டங்களை தயாரிக்க அமைச்சர்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''மத்தியில் அமையவுள்ள புதிய அரசின் முதல், 100 நாட்களுக்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான திட்டங்களை தயார் செய்யும் பணியை துவங்குங்கள்,'' என, மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். லோக்சபா தேர்தல் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியான நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் நேற்று நடந்தது.அப்போது, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பிய மத்திய அமைச்சரவை, ஏழு கட்ட லோக்சபா தேர்தல் தேதிகளை அறிவிக்கும் அதிகாரப்பூர்வ செயல்பாடுகளை துவங்கியது. அப்போது, மத்திய அமைச்சர்களுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ''வரும் ஜூன் மாதம் புதிய அரசு பொறுப்பேற்றதும் முதல், 100 நாட்களுக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து திட்டமிடுங்கள். ''அதேபோல், 'விக் ஷித் பாரத்' திட்டத்தின்படி வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து அந்தந்த துறை செயலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யுங்கள்,'' என வலியுறுத்தினார். இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விக் ஷித் பாரத் திட்டம் கடந்த இரண்டு ஆண்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட திட்டமாகும். 'வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க பல்வேறு மட்டங்களில் 2,700க்கும் மேற்பட்ட கூட்டங்கள், பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. நாடு முழுதும் 20 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

T. Sivaraj
மார் 18, 2024 16:36

இதுதான் ஒரு தலைசிறந்த தலைவனுக்கான எடுத்துக்காட்டு. தன்னம்பிக்கை. நாம் செய்த நல்ல திட்டங்களுக்காக மக்கள் நம்மை மீண்டும் தேர்ந்தெடுப்பர் என்ற நம்பிக்கயில் அடுத்தகட்ட திட்டங்களுக்காக இப்பொழுதே ஆயுத்தம் செய்யும் இந்த தலைவனுக்காக மக்கள் எப்பொழுதோ தயாராகிவிட்டனர் ஓட்டளிக்க. மோடிஜி வாழ்க வளமுடன். வெல்க பாரதம் .


rameshkumar natarajan
மார் 18, 2024 10:07

I think he has to come out of dream. First BJP should win the election, after that only 5 year plan. Don't take people for granted.


N. Srinivasan
மார் 18, 2024 09:44

கடைசி தேர்தல் என்று சொல்லுபவர்கள் கட்சி இனிமேல் இருக்காது என்ற பயம்... மோடி பொறுத்தமட்டில்... நான் திரும்பி வந்தால் பிறகு வேலையை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் கிடையாது... திரும்பி வருவேன் என்ற விடா நம்பிக்கை.. அவர் நாட்டிற்கு, மக்களுக்கு அவர் செய்த நல்ல விஷயங்களில் அவருக்கு உள்ள நம்பிக்கை... மடியில் கணம் இல்லை....


அப்புசாமி
மார் 18, 2024 07:32

அடடே... நூறாண்டுக்கு பட்ஜெட் போட்டு, 2047 ல் வல்லரசுன்னு அடிச்சு உட்டாங்களே


Ramesh Sargam
மார் 18, 2024 05:28

எப்பொழுதும் மக்களின் நலமே பிரதமர் மோடியின் நினைவாக இருக்கும்.


Priyan Vadanad
மார் 18, 2024 01:15

அதுதான் தேர்தலுக்கு முன்னதாகவே வெற்றி கிடைத்துவிட்டது. இனி சோளக்காட்டில் யானை ராஜ்ஜியம்தான். இது தன்னம்பிக்கையினால் வருகின்ற காட்சியல்ல. வெற்றியை கொண்டாட திட்டம் தீட்டலாம். வெற்றி பெருமுன் நாட்டுக்கான சட்டதிட்டங்களை உருவாக்க சொல்வது எதனுடைய அடையாளம்? இதுதான் கடைசி தேர்தல் என்று எதிர்க்கட்சியினர் சொல்வது போல நடந்துவிடுமோ??


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை