உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடியை எடுத்துச் செல்லலாம்; மத்திய அரசு சலுகை

ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடியை எடுத்துச் செல்லலாம்; மத்திய அரசு சலுகை

புதுடில்லி: ஐயப்ப பக்தர்கள் விமான பயணத்தின் போது இருமுடியை எடுத்துச் செல்லலாம் என்று மத்திய அரசு சலுகையை அறிவித்துள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் புகழ்பெற்றது. இந்த கோவிலுக்கு தற்போது பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டிக் கொண்டு சென்று வருகின்றனர். விமானங்களில் ஐயப்ப பத்கர்கள் பயணிக்கும் போது இருமுடி கட்டிக் கொண்டு செல்ல அனுமதி இல்லை. இந்த நிலையில், இருமுடி பைகளை அவர்கள் கொண்டு செல்ல மத்திய அரசின் தரப்பில் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தமது எக்ஸ் வலை தள பதிவில் வெளியிட்டுள்ளார். அவர் அதில் கூறி உள்ளதாவது: சபரிமலை புனித யாத்திரை செல்லும் பக்தர்கள் விமானங்களில் இருமுடியை எடுத்துச் செல்லலாம். இந்த சலுகை நவ.28 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஜன.20ம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும். பக்தர்களின் ஆழமான உணர்வுகளை புரிந்து கொண்டு, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அதே நேரத்தில் பாதுகாப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்படும். ஒவ்வொரு சமூகத்தின் நம்பிக்கை, கண்ணியத்தை உறுதி செய்ய அரசு அர்ப்பணிப்புடன் இருக்கிறது.இவ்வாறு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை