மேலும் செய்திகள்
நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.70 லட்சம் கோடி
3 hour(s) ago
பெங்களூரு: முதல்வர் பதவிக்கு போட்டி நிலவி வரும் நிலையில், சித்தராமையாவை நாளை காலை விருந்துக்கு துணை முதல்வர் சிவகுமார் அழைத்துள்ளார்.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த, 2023ல் ஆட்சி அமைவதற்கு, மாநில காங்., தலைவராக இருக்கும் துணை முதல்வர் சிவகுமாரும் முக்கிய காரணம். அப்போதே அவர் முதல்வர் பதவி வேண்டும் என்று வலியுறுத்தினார்.ஆனால், நீண்ட ஆலோசனைக்கு பின், சித்தராமையாவுக்கு இரண்டாவது முறையாக முதல்வர் பதவி கிடைத்தது. சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் முடிந்த நிலையில், சிவகுமார் முதல்வராக பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.அவரது ஆதரவாளர்கள் கடந்த ஒரு மாதமாக கூக்குரல் எழுப்பி வந்தனர். இதற்கு எதிராக முதல்வரின் ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கருத்துகளை கூறியதால், மாநிலத்தில் குழப்பம் ஏற்பட்டது. காங் மேலிடம் உத்தரவுப்படி சில தினங்களுக்கு முன்பு, துணை முதல்வர் சிவகுமாரை, சிற்றுண்டிக்கு வரும்படி, முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்தார்.அவரது அழைப்பை ஏற்று விருந்தில் சிவகுமார் பங்கேற்றார். இட்லி, உப்புமா, தோசை, சட்னி, சாம்பார், கேசரிபாத், சிற்றுண்டியில் பரிமாறப்பட்டதாக தகவல் வெளியானது. சிற்றுண்டிக்கு பின், ஒரு தனி அறைக்கு சென்று ரகசிய பேச்சு நடத்தினர். தற்போது, சித்தராமையாவை நாளை காலை விருந்துக்கு துணை முதல்வர் சிவகுமார் அழைத்துள்ளார். இது குறித்து சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நானும், முதல்வர் சித்தராமையாவும் ஒரு குழுவாக இணைந்து தொடர்ந்து பணியாற்றுகிறோம்.கர்நாடகாவிற்கு எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் கூட்டு முயற்சிகளைப் பற்றி விவாதிக்க நாளை (டிசம்பர் 2) காலை உணவுக்கு முதல்வரை அழைத்துள்ளேன். இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார். கர்நாடகாவில் முதல்வர் பதவிக்கு மோதல் நிலவிவரும் சூழ்நிலையில் இருவரும் மாறி மாறி காலை விருந்துக்கு அழைத்து சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கர்நாடக அரசியலில் காலை விருந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
3 hour(s) ago