உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய தேர்தல் கமிஷனர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதிய தேர்தல் கமிஷனர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: புதிய தேர்தல் கமிஷனர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கை வரும் வியாழக்கிழமைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்யும் உயர்மட்ட குழுவில், பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், மத்திய அமைச்சர் இடம் பெறுவர் என, மத்திய அரசு கடந்தாண்டு சட்டம் இயற்றியது. இந்த குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சேர்க்கப்படவில்லை. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இச்சூழ்நிலையில், புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இன்று அவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.இந்நிலையில், தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான புதிய சட்டத்திற்கு எதிரான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் புதிய தேர்தல் கமிஷனர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.அதற்கு நீதிபதிகள், பொதுவாக, எந்தவொரு சட்டத்திற்கும் இடைக்கால உத்தரவு மூலம் தடை விதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், புதிய தேர்தல் கமிஷனர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது. இதற்காக தனியாக மனு தாக்கல் செய்யுங்கள் எனக்கூறி, வழக்கை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

vaiko
மார் 15, 2024 23:35

எஸ் பீ ஐ தவறுகளுக்கு காரணமான நிர்மலா சீதாராமனை கைது செய்து சிறையில் அடைக்க உச்ச நீதி மன்றம் உத்தரவு போடவேண்டும்.


Sathyasekaren Sathyanarayanana
மார் 16, 2024 07:32

உன்னோட தலைவர்கள் மாதிரி அவருடைய மகளுக்கு நூறு கோடி செலவுசெய்து திருமணம் நடத்தவில்லை அதுவா? ஊழல் செய்து குடும்பத்துக்கு பத்து தலை முறைக்கு சொத்து சேர்க்கவில்லை அதுவா? உங்களுக்கு நேர்மையான நிர்மலா அவர்களை சிறையில் போட வேண்டும் ஊழல் செய்து கொள்ளை அடிக்கும் திருட்டு திராவிடம்


ஆரூர் ரங்
மார் 16, 2024 10:54

A1 குற்றவாளி பொன்முடியை மந்திரியாக நியமித்த ஸ்டாலினை?( தேர்தல் பத்திரங்கள் முறையைக் கொண்டு வந்தது முன்னாள் நிதியமைச்சர்).


Ramesh Sargam
மார் 15, 2024 23:31

வழக்கை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.... இப்படி வொவொரு வழக்கையும் தள்ளிபோடுவதாலதான் நாட்டில் கோடிக்கும் அதிகமான வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதில் நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால், பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் இறந்தும் போயிருப்பார்கள். அவலம்.


sankaranarayanan
மார் 15, 2024 22:23

உச்ச நீதிமன்றத்தில் லட்சக்கணக்கான வழக்குகள் பல பல வருடங்களாக தேங்கி கிடைக்கும்போது மோடி அரசு என்ன செய்கிறது என்னென்ன புது புது சட்டங்கள் கொண்டுவருகின்றன என்று அதையே உற்று கவனித்து அவைகளை எப்படி சாம்பல் நீராக்குவது என்ற ஒரே எண்ணத்தோடு மும்முரமாக வேலை செய்வது நாட்டிற்கே நல்லது அல்ல அல்ல அல்ல


தாமரை மலர்கிறது
மார் 15, 2024 19:28

தேர்தல் கமிஷனரை பிரதமர் தான் தேர்ந்தெடுப்பார். இதற்கான சட்டத்தை ஏற்கனவே மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டது. இதற்குமேலும் இதில் சுப்ரிம் கோர்ட் மூக்கை நுழைக்க முடியாது.


suresh
மார் 15, 2024 16:30

நல்லது . வரும் வியாழ கிழமையும் இதே நடக்கும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை