உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயிரை மேய்ந்தது வேலி; 17 கோடி ரூபாய் தங்கத்துடன் பழைய மேனேஜர் ஓட்டம்!

பயிரை மேய்ந்தது வேலி; 17 கோடி ரூபாய் தங்கத்துடன் பழைய மேனேஜர் ஓட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோழிக்கோடு: கேரளா மாநிலம், கோழிக்கோட்டில், தமிழகத்தைச் சேர்ந்த வங்கி மேலாளர் ரூ.17 கோடி மதிப்புள்ள 25 கிலோ அடகு நகைகளுடன் தப்பிச் சென்றார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் மேலாளர் ஆக, தமிழகம், திருச்சியைச் சேர்ந்த மது ஜெயக்குமார் பணியாற்றி வந்துள்ளார். அவர் கடந்த ஜூன் மாதம் கொச்சியில் உள்ள கிளை வங்கி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். புதிய மேலாளராக, பனூரை சேர்ந்த இர்ஷாத் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். பணியில் இணைந்த உடன், அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகை அனைத்தையும் ஆய்வு செய்தார். அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது; மொத்தமும் போலி நகை என்பதை அறிந்ததும், அவருக்கு மயக்கமே வந்து விட்டது.

போலி தங்கம்

பணி மாறுதல் செய்யப்பட்ட மது ஜெயக்குமார், ஒரிஜினல் நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை வைத்து, மொத்தமும் ஆட்டையை போட்டது அனைவருக்கும் புரிந்தது. புதிய பணியிடத்தில் சென்று சேரவும் இல்லை என்பதால், திட்டமிட்டு இந்த வேலையை அவர் செய்திருப்பது தெரியவந்தது.

ரூ. 17 கோடி இழப்பு

இதையடுத்து பழைய மேலாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த தங்க ஆபரணங்களை வங்கியில் கணக்கு வைத்துள்ள 42 பேர் அடகு வைத்துள்ளனர். நகை போனதால், வங்கிக்கு ரூ. 17 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மாயமான முன்னாள் மேலாளர் மது ஜெயக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Mahalingam
ஆக 18, 2024 17:38

தமிழ் நாடு என்று சொன்னால் பிஜேபி இருக்காது திரு முன்னேற்றமாக தான் இருக்கும்


saiprakash
ஆக 17, 2024 13:36

ஒருவேலே பிஜேபி கட்சிக்காரனா இருப்பானோ


SVK SIMHAN
ஆக 18, 2024 20:59

கண்ணா.... தமிழகத்தில் பணம் ???? போதை, கொள்ளை, கையூட்டு, இது தான் மனிதனாக வாழும் தகுதி என்ற மூளைச்சலவை திராவிட கழகம் விதைத்த நஞ்சு. தலைமுறை தாண்டி முன்னேற்ற பாதையில் படர்ந்து கிடக்கிறது.


தமிழ்வேள்
ஆக 17, 2024 11:47

நல்லா பாருங்கப்பு...கிரிப்டோவா இருக்க போகிறான்.... தங்க ஏசு சபை ஒன்றை துவக்கி தானே பிஷப் ஆனால் போதும்.. யாரும் கை வைக்க மாட்டார்கள்..வாட்டிகனுக் ஒரு பங்கு கொடுத்து விட்டு பிறகு எதிர்காலத்தில் தசமபாகம் வசூல் அள்ளி விட முடியாதா?


ems
ஆக 17, 2024 11:40

தமிழகத்தை சேர்ந்த திருச்சி முன்னாள் அல்லது இந்நாள் திராவிட கழக உறுப்பினர் என்று... போடுவதற்கு பதில்... தமிழகத்தை சேர்ந்த.... என்று பிழையாக அச்சிடப்பட்டது...


Rajathi Rajan
ஆக 17, 2024 11:21

இங்கு கருத்து சொல்லும் எவனும் தமிழன் இல்ல போல? கலப்பட .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 17, 2024 20:49

உன்பேரு உன்கருத்தெல்லாம் பார்த்தா குறைஞ்சது மூணுவித ரத்தம் உன் உடம்புல ஓடுதுன்னு புரியுது .... வந்துட்ட பேச ....


Kumar Kumzi
ஆக 17, 2024 11:00

இது எங்கள் கட்டுமரம் பாணி ஆச்சே


ராமகிருஷ்ணன்
ஆக 17, 2024 10:58

விடியல் பயிற்சி பெற்றவராக இருக்க வாய்ப்பு உள்ளது.


Barakat Ali
ஆக 17, 2024 10:53

அடித்துச் சுருட்டுவதில் திராவிட மாடலுக்கு ஈடு இணை இல்லை ...... பீகாரிகளும் தோற்றுவிடுவர் ....


Ramesh Sargam
ஆக 17, 2024 10:48

தமிழகத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிடாமல் இருந்திருக்கலாம். திருடர்கள் எல்லா மாநிலத்திலும் இருக்கின்றனர்.


DAVID DHAVARAJ
ஆக 17, 2024 10:37

தங்௧ம் திருடி தலைமறைவான மேனேஜர்.பிடித்த பின் உண்மை தெரியும்.தமிழன் மானத்தை௧் ௧ப்பலேற்றிய தமிழன்.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ