உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானாவோ, தமிழகமோ.. தே.ஜ., கூட்டணிக்கு அமோக ஆதரவு: பிரதமர் மோடி

தெலுங்கானாவோ, தமிழகமோ.. தே.ஜ., கூட்டணிக்கு அமோக ஆதரவு: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தெலுங்கானாவோ, கர்நாடகாவோ, தமிழகமோ தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அமோக ஆதரவு காணப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி இன்று (மார்ச் 18) தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மற்றும் கர்நாடக மாநிலம் ஷிவமொகா பகுதிகளில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். ஷிவமொகா பழைய சிறைச்சாலை திடலில் உள்ள சுதந்திர பூங்காவில் நடக்கும் கூட்டத்தில், பாஜ., வேட்பாளர் ராகவேந்திராவை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து தமிழகம் வரும் அவர் கோவையில் மாலையில் நடைபெற உள்ள 'ரோடு ஷோ'வில் கலந்து கொள்கிறார்.இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டதாவது: இன்று ஜக்தியால் மற்றும் ஷிவமொகாவில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறேன். அதன்பிறகு மாலையில், கோவையில் நடக்கும் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறேன். தெலுங்கானாவோ, கர்நாடகாவோ, தமிழகமோ தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அமோக ஆதரவு காணப்படுகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

முருகன்
மார் 18, 2024 22:14

ஜுன் நான்கில் புரியும் உன்மை நிலை


Mariadoss E
மார் 18, 2024 19:51

பகல் கனவு.....


Subbiah Ayyanar
மார் 18, 2024 14:06

அதிகமா கனவு காண வேண்டாம் பிரதமரே.. இந்தியா முழுவதும் 160-190 தொகுதியில் தான் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்


ramesh
மார் 18, 2024 15:03

நானூறு குறைந்த பட்ச்சம் ... மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள்


venugopal s
மார் 18, 2024 12:42

அப்படி என்றால் நீங்கள் வாரணாசி தொகுதியில் நிற்காமல் தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் தைரியமாகப் போட்டியிடலாமே!


Ramanujadasan
மார் 18, 2024 13:59

இப்படியே நீங்கள் உங்கள் கொள்ளை கழகத்தவரிடம் சொல்லி அவர்களை தமிழகத்திற்கு வெளியே எங்காவது தைரியமாக போட்டி போட சொல்லுங்களேன்


செந்தமிழ் கார்த்திக்
மார் 18, 2024 14:45

தென்னவர்கள் சிலர் அறிவற்றவர்கள் என்று உங்களையும் தான் உதாரணமாக பார்க்க தோன்றுகிறது. திமுக மாநில கட்சி. தேசிய கட்சி அல்ல. பாஜக தான் தேசிய கட்சி என்று மார் தட்டுகிறது. இங்கு போட்டியிட திராணி இல்லையோ ?


Bellie Nanja Gowder
மார் 18, 2024 14:59

என் உன் சுடாலின் வாரணாசியில் போட்டியிட சொல்வது தானே.


Barakat Ali
மார் 18, 2024 12:31

ஏற்கனவே உ பி ஸ் கதறல், ஓலம், அழுகை, புலம்பல், கூவல் அதிகமா இருக்கு ..... நீங்க வேற இடைக்கிடைக்கு இப்படி பட்டாசு கொளுத்தி போட்டுடறீங்க ....


Rajah
மார் 18, 2024 12:28

தமிழகம் போதைப்பொருள் மற்றும் டாஸ்மாஸ்க் போதையில் இருக்கிறது. விரைவில் திராவிடத் தொண்டர்கள் பிரியாணி பார்ஸளோடும் குவார்ட்டர் பாட்டிலோடும் வருவார்கள். போதையில் இருந்து விழித்தெழுவார்களா தமிழக மக்கள் ? உங்களுக்குத் தரப்படும் ஒவ்வொரு குவார்ட்டர் பாட்டலிலிலும் போதைக்கு அடிமையாகும் ஒரு வித விஷத் திராவகம் கலந்திருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.உங்கள் கையில் உங்கள் எதிர்காலம் உள்ளது.


செந்தமிழ் கார்த்திக்
மார் 18, 2024 12:26

அண்ணனுக்கு ஒரு ஜெலுசில் பார்சல்.


Muralidharan raghavan
மார் 18, 2024 16:08

இந்த முறை பாஜக வடக்கிலும் தெற்கிலும் நானூறு இடத்திற்கும் மேல் வெற்றிபெற்று ஆட்சி அமைத்து அரசியல் சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும்


kumar c
மார் 18, 2024 17:12

புரியறமாதிரி . நன்னா பேசினால் புரிச்சுடும்


Ramanujadasan
மார் 18, 2024 11:20

மோடி ஜி ரொம்ப பெரிய அறிவாளி, தெலுங்கானா மற்றும் தமிழகத்தை மற்றும் இங்கே சுட்டி காட்டி இருக்கிறார் , ஏனெனில் இந்த இரண்டு மாநிலங்களிலும் என் டீ ஏ என்பது பிஜேபி தான் . ஓடியாவிலும் ஆந்திராவிலும் , எதிர்க்கட்சி என்பதே இருக்க போவதில்லை , ஓடியா இருபத்தி ஒன்று, ஆந்திரா இருபத்தி ஐந்து எல்லாமே என் டீஏ வுக்கு தான் இந்த முறை என் டீ ஏ நான்னூரை தாண்டுவது சர்வ நிச்சயம் .


செந்தமிழ் கார்த்திக்
மார் 18, 2024 11:20

இந்தியாவிற்கு ஆட்சி மாற்றம் கட்டாய தேவை. மாற்று கருத்தே கிடையாது.


Ramanujadasan
மார் 18, 2024 11:27

இ ந் தி யா என்ற புள்ளி வைத்திருக்கும் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தான் ஆட்சி மற்றம் நடை பெற போகிறது , பாரதத்தில் அல்ல


செந்தமிழ் கார்த்திக்
மார் 18, 2024 11:19

யாராவது இவரிடம் தெளிவாக சொல்லுங்கள். வடக்கே இருக்கும் மக்களை விட தெற்கில் இருக்கும் மக்கள் கல்வி அறிவில் முன்னேறியவர்கள். முக்கியமாக அரசியலையும் ஆன்மீகத்தையும் அறிவியல் கண்ணோடு பார்க்கும் பகுத்தறிவு கொண்ட மக்கள் என்று. என்ன தான் உடம்பில் எண்ணெய் தேய்த்து உருண்டு பிரண்டாலும் ஒட்டுற மண் தான் ஒட்டும்.


Ramanujadasan
மார் 18, 2024 11:28

உம்மை பார்க்கும் சமயத்தில் வடக்கே இருக்கும் மக்களை விட தெற்கில் இருக்கும் மக்கள் கல்வி அறிவில் முன்னேறியவர்கள் என யாரும் நினைக்க மாட்டார்கள் ...


Rajah
மார் 18, 2024 12:37

கல்வி அறிவு இருந்தும் என்ன பயன்? அவர்கள் படிக்காத மேதைகள் நீங்கள் படித்த முட்டாள்கள்.


hari
மார் 18, 2024 13:13

இவரு வண்டி மதுரை to சென்னை பஞ்சர் ஆகி ரொம்ப ஆகுது.... அது தெரியாம இன்னும் ஒட்டிட்டே இருக்காரு.....


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 18, 2024 13:16

உங்க கருத்துக்களை படிச்சா தென்னவர்கள் அறிவில் சிறந்தவர்கள் ன்னு சொல்ல முடியாதே பாஸ் .....


செந்தமிழ் கார்த்திக்
மார் 18, 2024 13:35

என்னோட கார் பஞ்சர் ஆச்சுன்னா சொல்றேன் வந்து ஒட்டி குடுங்க.


ஆரூர் ரங்
மார் 18, 2024 13:53

சென்ற தேர்தலில் தென்னகத்தில் பாஜக 29 எம்பி இடங்களை கைப்பற்றியது. தி.மு.க 23 இடங்களையே பிடித்தது. ஆக???? 29 இடங்களைப் பிடித்த கட்சிக்குத்தான் மக்களின் அதிக ஆதரவும்.


செந்தமிழ் கார்த்திக்
மார் 18, 2024 14:48

அது பாஜக கூட்டணி பெற்றது 29, திமுக கூட்டணி 40+ சரியா கணக்கு போடுங்க.


Bellie Nanja Gowder
மார் 18, 2024 15:05

செந்தமிழை உன்னை போல ஒரு முட்டாள்கள் தி மு க வில் இருந்து கொண்டு அறிவாளிகளை பற்றி பேசலாம். தமிழகத்தில் அறிவாளிகள் பெருமளவில் இருக்கிறார்கள் எனபதை நீ சொல்லி தன திரிய வேண்டும் என்பது இல்லை. தி மு க வில் தான் அறிவாளிகள் இல்லை என்பது தான் உண்மை. பஞ்சர் ஆனா கபோதிகள் தான் தி மு க வில் இருப்பவர்கள்.


Ramanujadasan
மார் 18, 2024 15:27

தனி கட்சி பெற்றது பற்றி பேசுகிறார் அவர் . நீரோ கூட்டணியாக அடித்தது பற்றி பேசுகிறீர் .


Ramanujadasan
மார் 18, 2024 15:30

தமிழகத்திர்ற்கு வெளியே போட்டி போட சொன்னது ஏனெனில் , நீங்களும் உங்கள் கொள்ளை கூட்டமும் தான் இந்த முறை புள்ளி கூட்டணி தான் பாரதத்தில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க போகிறது என்று உளறிக்கொண்டு இருப்பதினால் தான் .அந்த உளறலை அது எவ்வளவு பொய் என நிரூபிக்க ஆசை பட்டதால் தான் என அறியவும் .


செந்தமிழ் கார்த்திக்
மார் 18, 2024 16:26

தமிழர்கள் வாக்கு செலுத்தி தான் திமுக கட்சி அறுதி பெரும்பான்மை பெற்று சிறப்பான ஆட்சி செய்து வருகிறது


kumar c
மார் 18, 2024 17:07

அண்ணே யாராவது இவருக்கு சொல்லுங்களேன் . ஒரே கருத்தை மாத்தி மாத்தி பல பக்கத்தில் சொன்னாலும் கிடைக்கிற லைக் தான் கிடைக்கும்னு .தர போற பேட்டா தான் கொடுக்க போறான் . நாட்டின் எதிர் காலத்தை 200 ரூபாக்கு அடமானம் வைக்கிறவன் எல்லாம் படிச்சவனை பற்றி பேசுறாங்க . முன்னாடி அதிமுக ஜெயிச்சா அது கிராமத்து கட்சினு சொல்லுவானுங்க . படிச்சவன்னு சொல்லுறாரே அந்த படிப்பறிவுக்கு அளவு கோல் அண்ணனுக்கு தெரியுமா ? தன் பேர் எழுத படிக்க தெரிந்ததால் போதும். எல்லா படிச்சவனும் இங்கதான்னு வச்சுக்கிட்டா


kumar c
மார் 18, 2024 17:16

ஒரு திருத்தம் தமிழர்கள் வாக்கு சிதறி ...


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை