உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டை ஒன்றிணைப்பதே உண்மையான தேசபக்தி: ராகுல் பேச்சு

நாட்டை ஒன்றிணைப்பதே உண்மையான தேசபக்தி: ராகுல் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: நாட்டை ஒன்றிணைப்பதே உண்மையான தேசபக்தி என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று (பிப்.,17) பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் மேற்கொண்டார். அப்போது அவர் ஜீப்பில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.குடாலியா பகுதியில் மக்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது: நாட்டின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்னைகளை ஊடகங்கள் காட்டுவதில்லை. நாட்டை ஒன்றிணைப்பதே உண்மையான தேசபக்தி. பணக்காரர்களும் ஏழைகளும் வெவ்வேறு இந்தியாவில் வாழ்கிறார்கள். இந்தியா அன்பின் நாடு, வெறுப்பின் நாடு அல்ல. சகோதரர்களுக்கு இடையிலான மோதலால் நாடு பலவீனமடையும். யாத்திரையில் நான் ஒருபோதும் வெறுப்பை பார்த்ததில்லை; ஆர்எஸ்எஸ், பாஜ.,வினர் கூட நடைபயணத்தில் இணைகின்றனர். இவ்வாறு ராகுல் பேசினார்.

வழிபாடு

இதற்கிடையே, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ராகுல் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது உத்தரப் பிரதேச காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய் ராய் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

J.V. Iyer
பிப் 18, 2024 06:48

ரோம் நகர் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதை. இவரால், கான்-கிரேஸ் அழிந்துவருகிறது. அதைப்பற்றி இவருக்கு கவலை இல்லை. என்ன செய்யவேண்டுமோ அதை செய்யாத . மண்டை குழம்பி,... பாவம்.


kijan
பிப் 18, 2024 00:27

ப்ரயக்ராஜ் ....பழைய அலஹாபாத் பூரா உங்க பூட்டன் ....மோதிலால் நேரு வின் சொத்து .... உங்க ஊருக்கு நீங்க வர்றதால .... அவுங்களுக்கு அல்லு விட்ருக்கும் ..... நீ கலக்கு தல ....


g.s,rajan
பிப் 18, 2024 00:00

தேச பக்தி எந்தக் கடையில் கிடைக்கும்...???.


g.s,rajan
பிப் 17, 2024 23:53

தேச பக்தி கிலோ என்ன விலை ....???.


g.s,rajan
பிப் 17, 2024 23:53

சாத்தான் வேதம் ஓதுது .....


A1Suresh
பிப் 17, 2024 22:54

அருணாசல பிரதேசத்திற்கு "பாரத் ஜோடோ" யாத்திரை ஏன் செல்லவில்லை ? சீனா காட்டிகொடுத்துவிடும் என்ற பயமா ?


DR Sanaathan Rakshak Sanga Nadar
பிப் 17, 2024 22:10

தனி திராவிடம் வேண்டும் . தெற்கு தேய்கிறது வடக்கு வாழ்கிறது என்று பிரிவினை பேசும் திமுக உடன் கூட்டு. நாடு ஒருங்கிணைப்பு யாத்திரை என்னங்கடா ஒரே குழப்பமா இருக்க்கே. கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரிவினை பேசுகிறார். ராகுல் ஒருங்கினைப்பு யாத்திரை என்கிறார். அந்நியன் மாதிரி பேசுறீங்க.


kulandai kannan
பிப் 17, 2024 21:04

திமுகவை உடன் வைத்துக்கொண்டு இப்படி பேசுவதற்கு, அசாத்திய பைத்தியக்காரத்தனம் வேண்டும்.


K.Muthuraj
பிப் 17, 2024 21:00

தத்துவ சாணி நல்லா தான் போடறாரு.


kumar
பிப் 17, 2024 20:53

இந்தி கூட்டணி காட்சிகள் தானே நாட்டை துண்டாட திட்டங்கள் வகுக்கின்றன . இதை இவர் எப்போதும் பிரிவினை பேசும் திமுக , பினராயி விஜயன் , ஜெகன் மோகன் ரெட்டி முதலியோரிடம் சொல்லி அவர்களை கட்டு படுத்துவாரா ? பிரித்தாளும் சூழ்ச்சியை பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு பின்னனால் செயல் படுத்தியது காங்கிரஸ் தானே


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை