உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடா? பயநாடா?: சரியும் நிலத்திற்குள் புதையும் உயிர்கள்

வயநாடா? பயநாடா?: சரியும் நிலத்திற்குள் புதையும் உயிர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக மாறியுள்ளது. நிலச்சரிவு ஏற்படும்போதெல்லாம் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகின்றன.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலமான இந்த மாதங்களில் அடிக்கடி நிலச்சரிவு சம்பவங்களும் நடந்து வருகின்றன. 2006 முதல் இதுவரை ஏராளமான நிலச்சரிவுகளை வயநாடு கண்டிருக்கிறது. அதில் 10 நிலச்சரிவுகள் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2018ல் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 12 பேரும், 2019ல் 17 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் 5 பேர் நிலச்சரிவின் போது காணாமல் போய் இதுவரை கிடைக்கவில்லை.தற்போது மீண்டும் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டிருந்தாலும், ஏராளமான வீடுகள் நிலச்சரிவில் சிக்கியதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வயநாடு மாவட்டத்தில் மழைக்காலம் வந்தாலே மக்கள் பயத்துடன் நாட்களை கடந்து வரும் பரிதாப நிலையில் உள்ளனர். இந்திய ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்டோருடன் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Azar Mufeen
ஜூலை 31, 2024 11:59

கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறியதும் உண்மை என்று நம்பி அவர்களுக்கு சேவகம் செய்த முட்டாளின் வாரிசே, கேதர்நாத்தில் வெள்ளம் வந்தபோது பிஜேபி எம் பி தான் காரணமா, நான் ஒரு மனிதன், மனிதனுக்குத்தான் பிறந்தேன், மதத்திற்கு அல்ல, கருத்துகள் காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்


Barakat Ali
ஜூலை 31, 2024 07:53

அதே இடத்தில் பல்லாண்டுகளாக அடிக்கடி நடந்துவருகிறது... போதாக்குறைக்கு ஆக்கிரமிப்புகள் வேறு.. மனிதத் தவறுகளே காரணம் என்று வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.. மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஏன் கொடுக்கணும் ????


Kasimani Baskaran
ஜூலை 31, 2024 05:44

திராவிட ஸ்டைலில் தூர் வாரியத்தின் விளைவு போல தெரிகிறது. இனியாவது கவனமாக இருப்பது நல்லது - இல்லை என்றால் இது போல அப்பாவி உயிர்கள்தான் பலியாகும். மண்ணரிப்பை தவிர்க்க பல நாடுகள் தரையை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அது போன்று உருப்படியாக இல்லை என்றால் குறிப்பிட்ட பகுதிகளில் வீடுகட்ட அனுமதிக்கக் கூடாது.


Raja
ஜூலை 30, 2024 22:47

வயநாட்டில் தீய சக்திகள் அதிகரித்து உள்ளதே இதற்கு காரணம்


nb
ஜூலை 30, 2024 19:59

அவரு 5 வருஷமா உருப்படியா எதுவும் செய்யலைனு தெரியுது


பேசும் தமிழன்
ஜூலை 30, 2024 19:06

நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் சீட்டுக்கட்டு போல வீடுகளை கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தாதால் உண்டான பயன் தான் ....இந்த கோர சாவுகள் .


தஞ்சை மன்னர்
ஜூலை 30, 2024 18:07

கலைமான் முழிச்சிக்கோ


G Mahalingam
ஜூலை 30, 2024 17:19

காஷ்மீரில் மலை பகுதிகளில் பனியால் சில இடங்களில் மூன்று மாதங்கள் தங்க மாட்டார்கள். காலி செய்து விட்டு வேறு இடத்தில் வசிப்பார்கள். அது போல வயநாட்டில் ஜீலை ஆகஸ்ட் மாதத்தில் வேறு இடத்திற்கு போக வேண்டும்.


Godyes
ஜூலை 30, 2024 16:59

மண் மலை சரிவான இடங்களில் வீடுகள் கட்டுவது ஆபத்து


அதெல்லாம் முடியாது
ஜூலை 30, 2024 15:24

காங்கிரஸ் 99 தொகுதிகள் ஜெயித்ததின் விளைவு நாட்டு மக்கள் துன்பபட்டு கொண்டிருக்கிறார்கள் முன்பெல்லாம் இவ்வளவு பிரச்சனைகள் இல்லை காங்கிரஸ் மட்டும் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான் நாட்டை நாசமாக்கி விடுவார்கள் திருச்சிற்றம்பலம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை