உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இறந்தவரின் கண் எங்கே; மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்: எலி மீது பழி போடும் டாக்டர்கள்

இறந்தவரின் கண் எங்கே; மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்: எலி மீது பழி போடும் டாக்டர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது இடது கண்ணை காணவில்லை என்று உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து நோயாளியின் உறவினர் கூறியதாவது: வயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில், எனது உறவினர் பான்டஸ் குமாரை, பாட்னாவின் இரண்டாவது பெரிய மருத்துவமனையான நாலந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், கடந்த வியாழன் அன்று அனுமதித்தோம். குமாரை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்த பின் வெள்ளிக்கிழமை இரவு அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர். சனிக்கிழமை அதிகாலையில் மருத்துவமனையில் உடலை பெற உறவினர்கள் வந்து இருந்தனர். நானும் சென்று பார்த்தபோது, மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. உயிரிழந்த குமாரின் இடது கண் இல்லாமல் இருந்தது. வியாபார நோக்கத்தோடு மருத்துவர்கள் கண்ணை எடுத்துவிட்டார்கள் என நாங்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டோம். அவர்கள் எப்படி இவ்வளவு அலட்சியமாக இருக்க முடியும்? அவரை சுட்டுக் கொன்றவர்களுடன் மருத்துவமனையைச் சேர்ந்த ஒருவர் சதி செய்துள்ளார். இல்லாவிட்டால் மருத்துவமனை மக்களின் கண்களைப் பறிக்கும் தொழிலில் ஈடுபடுவதாக எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, மருத்துவமனையில் எலி பிரச்சனை உள்ளது. எலி கடித்து இருக்கலாம் என்று கூறுகின்றனர். இவ்வாறு அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், உயிரிழந்தவரின் கண் எடுக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். உடலில் சேதம் ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. எலிகள் கண்ணை கடித்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Mohan
டிச 02, 2024 16:26

என்னவொரு வாந்தி பிடிச்ச வெறி இந்துக்கள் மீது? பொய்யான, இழிவான எண்ணத்துடன் வைகுண்டேஸ்வரன் என்கிற டுபாக்கூரான டகல்பாஜி பெயரை வைத்துக் கொண்டு இந்துக்களை வெறுத்து அரசு ஊழியர்கள் செய்த நியாயமற்ற தவறுகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசை பங்கம் செய்வது கே9 த்தனமானது. அப்படி கருத்து எழுதி விஷம் வீசும் அமைதி மார்க்கத்து விடியல் சம்பள ஆசாமிக்கு, எல்லா புகழும் பெற்ற இறைவன் மன்னித்து மனிதநேய நல்வழி காட்ட வேண்டுமென வணங்கி கேட்டுக் கொள்கிறேன்


என்றும் இந்தியன்
நவ 17, 2024 20:25

MBBS-Medical Business Based Salesman BDS-Business Dental Salesman. ஆகிவிட்டது இந்த மருத்துவ படிப்பு இந்தியாவில்


Ram pollachi
நவ 17, 2024 17:08

ஆட்டோ கேரேஜ் ஆக இன்றைய மருத்துவமனைகள் மாறிவிட்டது... நம்ம வண்டியின் பாகத்தை கழட்டி வேறு ஒருவரின் வண்டிக்கு மாற்றி விடுவார்கள் நாமும் அதை கண்டு கொள்ள மாட்டோம்.... இளம் பெண்ணின் ஒரு மா....பை மட்டும் கழட்டி உடலை ஒப்படைத்த சம்பவம் பல்லடத்தில் நடந்தது.... இது எல்லாம் இந்த துறையில் ரொம்ப சகஜம்.


rajan
நவ 17, 2024 15:19

கொல்கொத்தா பெண் பயிற்சி மருத்துவர் பெருச்சாளிகளால் கற்பழிக்க பட்டு கொல்ல பட்டார் என்று இந்திய மருத்துவர் சங்கம் அறிவிக்க வேண்டும்


Oru Indiyan
நவ 17, 2024 14:49

இதே தமிழ்நாட்டில் நடந்து இருந்தால், மா சு என்ன சொல்லி இருப்பார்...


Indian
நவ 17, 2024 13:33

பிஹாரில் தானே .....ஆச்சர்ய படுவதற்கு ஒன்றும் இல்லை


Ramesh Sargam
நவ 17, 2024 12:15

கரண்ட் கட் ஆச்சுன்னா அணில் மீது பழி. கண் காணவில்லையென்றால் எலி மீது பழி. ஏண்டா இப்படி? நீங்க திருந்தவே மாட்டீங்களா…?


வைகுண்டேஸ்வரன்
நவ 17, 2024 12:14

சம்பந்தப்பட்ட டாக்டர், டீன், சுகாதாரத்துறை அமைச்சர், முதல்வர் எல்லோரும் இந்துக்கள். அரசு பாஜக கூட்டணி அரசு. என்ன சொல்வது?


SUBBU,MADURAI
நவ 17, 2024 13:06

எவனோ ஒருத்தன் ஒரு டாக்டரை குத்திட்டான்னா அதுக்கு திமுக ஆட்சி என்ன செய்யும் என்று முருகேசன் என்ற வாசகருக்கு நீங்கதான இப்படி பதில் கருத்தை போட்டீர்கள் இப்போது மட்டும் எல்லோரும் இந்துக்கள் அரசு பாஜக கூட்டணி அரசு என்று கூறி பிளேட்டை அப்படியே மாத்தி போடுறீங்களே இது எந்த ஊர் நியாயம்?


Sudhir
நவ 17, 2024 20:09

உமது பெயருக்கு அர்த்தம் தெரியுமா. முதலில் அதை 200 ரூபா உ பி என்று மாற்றிக்கொண்டு பிறகு பதிவிடவும் . நன்றி.


என்றும் இந்தியன்
நவ 17, 2024 20:29

சே சே சே திமுக ரூ 200 உபிஸ் ஒரு வஹாபி அஹமது கேட்பதில் தவறேயில்லை ஏனென்றால் அவர்களுக்கு இப்போ வேறே வேலை இருக்கின்றது


வைகுண்டேஸ்வரன்
நவ 17, 2024 12:12

இது பீகாரிலா? அடடா வட போச்சே.


வைகுண்டேஸ்வரன்
நவ 17, 2024 13:27

திராவிட மாடலா, விடியலையா ன்னு கூவ முடியலியே


என்றும் இந்தியன்
நவ 17, 2024 20:31

திமுக விற்கு வடை போச்சே?? அதிலும் கமிஷன் கிடைத்திருக்கும் அல்லவா திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசுக்கு


Rasheel
நவ 17, 2024 12:01

உடம்பையாவது கொடுந்தாங்களே. வாகன சோதனையில் பிடிபட்ட மோட்டார் வாஹனம் 1 வருடம் கழித்து கிடைத்தால் ஸ்டெரிங் wheel மட்டுமே கிடைத்தது போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை