உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பூ விற்கும் தாயிடம் ஐபோன் கேட்டு அடம்; இப்படி ஒரு மகன் தேவையா என நெட்டிசன்கள் கொந்தளிப்பு

பூ விற்கும் தாயிடம் ஐபோன் கேட்டு அடம்; இப்படி ஒரு மகன் தேவையா என நெட்டிசன்கள் கொந்தளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வறுமையில் வாடும் தாயிடம், அவரது மகன் அடம்பிடித்து 3 நாள் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்து, ஐபோன் வாங்கிய சம்பவம் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது.

செல்போன்கள்

இன்றைய இளம் தலைமுறையினர் கைகளில் செல்போன் இல்லாமல் பார்க்கவே முடியாது. கண்ணே கண்ணு அதுவும் ஒண்ணே ஒண்ணு என்பது போல் கைகளில் புதுப்புது மாடல்களில் 2 செல்போன்களை வைத்துக் கொண்டு வலம் வருகின்றனர்.

வைரல் வீடியோ

வசதி இல்லை என்றாலும் மிகவும் காஸ்ட்லியான லேட்டஸ்ட் மாடல் செல்போனை எப்பாடுபட்டாவது பெற்றோரிடம் அடம்பிடித்து வாங்கி விடுகின்றனர். வட இந்தியாவில் அப்படி அரங்கேறிய ஒரு சம்பவம் தான் இப்போது வீடியோவாக உருமாறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3 நாள் உண்ணாவிரதம்

கோயில் முன்பு பூ வியாபாரம் செய்து வரும் ஏழைத்தாய் ஒருவரிடம் அவரது மகன் தமக்கு ஐபோன் தான் வேண்டும் என்று அடம்பிடித்துள்ளார். தாய் மறுக்கவே.... உச்சப்பட்ச கோபத்தில் 3 நாட்களாக ஆகாரம் எதுவுமின்றி, தண்ணீர் குடிக்காமல் பட்டினி போராட்டம் நடத்தி உள்ளார்.

கத்தையாய் பணம்

மகனின் பிடிவாதம், பட்டினி போராட்டம் கண்டு மனம் வருந்திய ஏழைத்தாய், எங்கெங்கோ பணத்தை புரட்டி, வட்டிக்கும் கடன் வாங்கி ஐபோன் வாங்க மகனிடம் கொடுத்துள்ளார். கத்தையாக தாய் தந்த பணத்தை எடுத்துக் கொண்டு அவரையும் அழைத்துக் கொண்டு செல்போன் கடைக்கு இளைஞன் சென்றுள்ளார்.

கடை உரிமையாளர்

அங்கு அவரை கண்டு சிலர் என்ன விவரம் என்று கேட்டுள்ளனர். இதைக் கண்ட கடை உரிமையாளர் அதை வீடியோவாக படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டு உள்ளார். தமக்கு ஐபோன் வேண்டும் என்று தாயிடம் அடம்பிடித்ததை அவர் பெருமையாக கூற, வீடியோவை கண்ட பலரும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

விமர்சனம்

மகனின் பிடிவாதத்தை விமர்சிக்கும் பலரும், தாயின் செயலையும் விட்டுவைக்கவில்லை. குடும்பத்தின் நிலை,பணத்தின் அருமை ஆகியவற்றை சொல்லிக் கொடுப்பதை விட்டு செல்லம் கொடுப்பதாக விமர்சித்துள்ளனர். 'இப்படி ஒரு மகன் தேவையா' என்பதே நெட்டிசன்கள் பலரது விமர்சனமாக உள்ளது.இன்னும் சிலர் இன்று ஐபோன் கேட்டு அடம் பண்ணிய இளைஞர் நாளை என்னவெல்லாம் கேட்பார்? அதை அந்த ஏழைத்தாயால் வாங்கித் தரமுடியுமா? என்று கொந்தளித்து கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Agoram
ஆக 19, 2024 21:38

தாயின் தவறு தான், சரியாக வளர்க்காத பிள்ளைகள் இப்படி தறுதலையாக அலையும்


பேசும் தமிழன்
ஆக 19, 2024 20:10

அந்த அம்மா பாவம்..... அம்மா உங்களுக்கு இப்படிப்பட்ட பையன் உண்மையிலேயே தேவை தானா ???


நிக்கோல்தாம்சன்
ஆக 19, 2024 14:09

பலர் இங்கே சொல்லிவிட்டீர்கள் , ஆனால் பெட்ரா மனம் பிடித்து என்பதனை எத்துணை பேர் உணர்வார்கள் ?


Svs Yaadum oore
ஆக 19, 2024 13:51

கடைக்காரன் அந்த பையனுக்கு ஏன் அறிவுரை கூறவில்லை என்கிறார்கள் ...அந்த பையன் படிக்கும் பள்ளியில் ஆசிரியர் என்ன சொல்லிக்கொடுத்தார் ??....யாரும் சொல்லி கொடுத்து கேட்கும் மன நிலையில் இப்பொது பெரும்பாலான மாணவர் மாணவிகள் இல்லை ....இங்கே அடம் செய்து வாங்கி கொடுக்கவில்லை என்று அப்படியே தொங்கிய செய்திகளும் உண்டு ....சினிமா நடிகர் நடிகை சொன்னால் எடு படும் .....வீட்டில் அல்லது பள்ளியில் சொன்னால் எடுபடாது ....திராவிட மாடல் ...


Jai
ஆக 19, 2024 13:08

ஆப்பிள் போன் என்பது கார்களில் BMW, Audi, Benz இருப்பதைப் போன்றது. இப்படிப்பட்ட உயர்தர கார்களை எல்லாரும் வாங்க முடியாது. வாங்கினாலும் அதற்கான பராமரிப்பு செலவுகள் சாதரண மக்களால் செய்ய முடியாது, ஆப்பிள் போனும் அப்படித்தான். ஒரு முறை கீழே விழுந்து டிஸ்ப்ளே உடைந்து விட்டால் ஒரு லோன் போட்டு தான் டிஸ்ப்ளேவை சரி செய்ய முடியும். அப்படி ஒரு ஆப்பிள் போனை வாங்கி வாழ்வின் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்யப் போகிறார்களா? இல்லை. வெறும் சோசியல் மீடியா பார்ப்பதற்கு எதற்கு இப்படிப்பட்ட luxury போன் தேவை?


chennai sivakumar
ஆக 19, 2024 12:52

இது என் வாழ்வில் 50 ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்தது. நானும் சில நண்பர்களும் ஸ்டீரியோ ரெகார்ட் பிளேயர் பார்த்து மிக நன்றாக உள்ளது ஆனால் நம்மால் வாங்க முடியாது என்று வந்து விட்டோம். ஒரு நண்பர் அம்மா செல்லம். அப்பா வாயில்லாபூச்சி ஒரு மணி நேரத்தில் அதை வாங்கி வீட்டில் வைத்து கொண்டு மிக சப்தமாக இசை கேட்டு கொண்டு இருந்தார். தற்செயலாக அந்த பக்கம் சென்ற நான் இந்த ஒலி நாம் கடையில் கேட்டது போல உள்ளதே என்று யோசித்து அவர் வீட்டு கதவை தட்டினால் அந்த ஸ்டீரியோ ரெகார்ட் பிளேயர் இல் இசை வந்து கொண்டு இருந்தது. நண்பர் என்னை பார்த்து " எப்படி ? வாங்கி விட்டேன்" பார்த்தியா சிவா என்றார். அவரது தாயிடம் இவ்வளவு விலை கொடுத்து இப்போது அவசியமா? என்று கேட்டதற்கு ஒரே கலாட்டா வீட்டில் அதை இதை உடைத்து. வேறு வழி இல்லாமல் வங்கி கொடுத்தேன் கெடுத்தேன் என்றார். இந்த தாயாரும் இது போன்றவர் ஆக இருப்பார் என்று எண்ணுகிறேன்


P VIJAYAKUMAR
ஆக 19, 2024 12:49

NICE AND GOOD SUGGESTION


ديفيد رافائيل
ஆக 19, 2024 12:42

அந்த இடத்துல கூட கடைக்காரன் வியாபாரத்தை தானே பாத்து இருக்கான், அந்த டையனுக்கு அறிவுரை கூறி பணத்தை அந்த அம்மாவிடமே கொடுத்திருந்தா அந்த அம்மாவோட மனசு எவ்வளவு சந்தோஷப்பட்டிருக்கும்.


Kathiresan
ஆக 19, 2024 13:32

அவர்கள் வேறொரு கடைக்கு சென்றிருப்பார்கள்


mei
ஆக 19, 2024 12:36

நாளைக்கே இவளைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லுவான். அப்புறம் சொத்து எழுதி கொடுன்னு மிரட்டுவான்.


Rajarajan
ஆக 19, 2024 11:59

ஒரு குறிப்பிட்ட பிரிவினரில், நிறையபேர் உண்டைக்கட்டிகளாக விமர்சிக்கப்பட்டாலும், அவர்களது வாரிசுகள் தங்களை வருத்திக்கொண்டு, அரைவயிறு கஞ்சியுடன் படித்து முன்னேறி, இன்று பல துறைகளில் / பல நாடுகளில் கோலோச்சுகின்றனர் என்பதை, திராவிட கட்சிகள் முன்னுதாரணமாக தங்களது பிரிவினரின் இன்றைய தலைமுறைக்கு, உதாரணமாக காட்டுமா ?? கிராமங்களில் / மலை கிராமங்களில் இன்றும், பல கிலோமீட்டர் நடந்து பயணித்து அரசுப்பள்ளிகளில் / தெரு விளக்குகளில் பயின்று முன்னேறும் மற்ற பிரிவினரையும் உதாரணமாக ஏன் திராவிட கட்சிகள் காட்டுவதில்லை ?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ