உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / லோக்சபாவில் 20 ஆண்டுக்கு பின் பிரதிநிதித்துவம் இழந்த அ.தி.மு.க.,

லோக்சபாவில் 20 ஆண்டுக்கு பின் பிரதிநிதித்துவம் இழந்த அ.தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இருபது ஆண்டுகளுக்கு பின், லோக்சபாவில் அ.தி.மு.க.,வுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், 33 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ.,யும், தலா ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிட்டன. மற்ற ஐந்து தொகுதிகளில், கூட்டணி கட்சியான தே.மு.தி.க., முரசு சின்னத்தில் போட்டியிட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=moesu6xb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட, 35 வேட்பாளர்களும் தோல்வி அடைந்துள்ளனர். கடந்த 2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத், இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று, ஒரே ஒரு எம்.பி.,யாக இருந்தார்.கடந்த, 2014 தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., சார்பில், 37 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்று, நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக, அக்கட்சி பார்லிமென்டில் இடம் பெற்றது.கடந்த, 2004 தேர்தலில் தி.மு.க., கூட்டணி, 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது.அதேபோல, தற்போது தி.மு.க., கூட்டணி, 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க.,வுக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை என்பதால், லோக்சபாவில் பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளது- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ