உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இடைத்தரகர்கள் பிடியில் இ-சேவை மையங்கள்

இடைத்தரகர்கள் பிடியில் இ-சேவை மையங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு இ - சேவை மையங்களுக்கு செல்வோரிடம், இடைத்தரகர்கள் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டச் சேவைகளை, 'ஆன்லைன்' வாயிலாக பெற, தமிழக மின்னாளுமை முகமை, தமிழக கேபிள், 'டிவி' நிறுவனம் ஆகியவை, அரசு இ - சேவை மையங்களை நடத்துகின்றன. பிறப்பு, இறப்பு சான்று, வாரிசு சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பம் செய்யலாம். அனைத்து சேவைகளுக்கும் தலா, 60 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மையத்தில் தரப்படும் விண்ணப்பத்தை, துறை அதிகாரிகள் பரிசீலித்து சான்று வழங்குவர். இந்நிலையில், பெரும்பாலான இ - சேவை மையங்கள் இடைத்தரகர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அரசு நிர்ணயம் செய்திருப்பதை விட கூடுதல் பணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து, பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூறியதாவது:

தந்தை இறந்த சில நாட்களில் வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க, இ - சேவை மையம் சென்றேன். அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை 'ஸ்கேன்' செய்து பதிவேற்றம் செய்துவிட்டு, 60 ரூபாய் செலுத்தினேன். ஒரு வாரத்தில் சான்று கிடைக்கும் என்று தெரிவித்தனர். ஆனால், இரு வாரங்களாகியும் சான்று கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகம் சென்று விசாரித்தாலும், முறையான பதில் தரவில்லை. மறுமுறை விண்ணப்பித்தும் விண்ணப்பம் ரத்தானது. ஆனால், இ - சேவை மையத்தில் உள்ள இடைத்தரகர், 'நேரடியாக தாசில்தாரிடம் பேசி சான்று வாங்கி தருகிறோம்; 1,500 ரூபாய் செலவாகும்; ஓரிரு நாட்களில் கிடைக்கும்' என்றார். வேறு வழி இல்லாமல் அவரிடம் பணம் தந்தேன். அடுத்த மூன்று நாட்களில் சான்று கிடைத்து விட்டது. அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள் பணம் பெற்று சான்று வழங்கி வந்தனர்; இப்போது இடைத்தரகர்கள், இ - சேவை மையங்களுக்கும் வந்து விட்டனர். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

vkpuram madhavan
ஆக 13, 2024 21:15

இசேவை மையங்கள் அமைப்பது அங்கீகாரம் அளிப்பது அரசு. செயல்படுத்துவது VLE எனப்படும் வில்லேஜ் லெவல் என்டர்பிரனுவர் மூலம் தான். NeGp திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இதில் அரசின் நேரடி தலையீடு மிகக் குறைவு. அரசு Nகண்காணித்து சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


pattikkaattaan
ஆக 13, 2024 21:03

நானும் சிறிய அளவில் இ-சேவை மற்றும் ஆன்லைன் சேவைகள் செய்து வருகிறேன். குறைந்த சேவைக்கட்டணத்தில் மக்களுக்கு உரிய சேவை எளிதில் கிடைக்கிறது. சில அரசு அலுவலர்கள் பணம் எதிர்பார்க்கலாம். உரிய இடத்தில் புகார் செய்து நடவடிக்கை எடுங்கள்.


Joe Rathinam
ஆக 13, 2024 19:39

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணையும் ஈமெயில் ஐடி கொடுக்காமல் புரோக்கர்கள் தங்களது மொபைல் எண் ஈமெயில் ஐடி கொடுத்து விண்ணப்பித்து விண்ணப்பத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அதிக பணம் வசூலிக்கிறார்கள். எனவே ஒரு மொபைல் எண் மற்றும் ஈமெயில் ஐடிக்கு ஒரு விண்ணப்பத்தை மட்டும் அனுமதிக்க வேண்டும்.


sunny
ஆக 13, 2024 19:01

unmai daan. nanum padikapaten ayanavarm esevai mayyam


C.Kumaresan
ஆக 13, 2024 18:22

நான் சிவகங்கை மாவட்டம். கடந்த ஒரு மாதமாக சிறு குறு விவசாயி சான்று கேட்டு இரண்டு முறை இசேவை வாயிலாக விண்ணப்பித்தேன். இரண்டுமுறையும் தாசில்தார் ஒருவாரமாக மின் கையெழுத்து போடாமல் இழுத்தடித்து கடைசியாக ரிசெக்ட் ஆகியது. தற்போது மூன்றாவது முறையாக விண்ணப்பித்து ஒருவாரமாக மின் கையெழுத்து போடாமல் உள்ளார்.


Suresh Kumar
ஆக 13, 2024 16:19

ஒரு சில இ சேவை மையங்கள் அப்படியே செயல்படுவதற்காக மற்ற இ சேவை மையங்கள் மூலம் மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர் சான்றிதழ்களும் உடனடியாக கிடைக்கப் பெறுகின்றன. எங்கள் பகுதியில் அந்த மாதிரி எதுவும் நடப்பதில்லை அதிகாரிகள் சரியாக உண்மையாக செயல்படுகின்றனர். சான்றிதழ்கள் குறித்த நேரத்தில் மக்களுக்கு கிடைக்கிறது. நானும் அரசு இ சேவை மையம் நடத்தி வருகிறேன்.


Rajendran Veeranan
ஆக 13, 2024 13:45

எந்த பகுதியில் இந்த முறை உள்ளது என பாதிக்கப்பட்ட நபர் தெரிவிக்க வேண்டும். இ சேவை தொடங்கியது முதல் கையூட்டு மற்றும் காலதாமதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. பசும்பொன் இ-சேவை மையம் திருவாரூர்


அப்பாவி
ஆக 13, 2024 11:19

திருட்டு திராவுடனுங்க அரசு அலுவலகங்களில் நீக்கமற நிறைந்து கிடக்கின்றனர். அவிங்களில் பெரும்பாலோர் லட்சக் கணக்கில் லஞ்சம் குடுத்து வேலைக்கு சேர்ந்திருப்பாங்க. அவிங்க போட்ட காசை சம்பளம் வாங்கி எப்போ எடுக்கறது? கேக்குற காசை குடுத்துட்டு வேணுங்கறதை வாங்கிக்கோங்க. யார் ஆட்சிக்கு வந்தாலும் இதே கதைதான்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை