மேலும் செய்திகள்
அடுத்தது தமிழகம் தான்: மோடி அளித்த உறுதியால் பா.ஜ.,வினர் உற்சாகம்
13 hour(s) ago | 15
கூடலுார் : கர்நாடகா மாநிலம் துங்கபத்ரா அணையின் ஷட்டர் உடைந்தது போல் முல்லைப்பெரியாறு அணையும் உடையும் என கேரளாவில் அடுத்த நாடகத்தை அம்மாநில அரசியல்வாதிகள் துவக்கி பரப்பி வருகின்றனர்.வயநாடு நிலச்சரிவை காட்டி சில நாட்களாக முல்லைப்பெரியாறு அணையும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கேரள அரசியல்வாதிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது தமிழக விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து தமிழக விவசாய சங்கங்களும் ஆர்ப்பாட்டத்தை துவக்கியுள்ளன.இது ஒரு புறம் இருக்க அடுத்த நாடகத்தை கேரளா துவக்கியுள்ளது. நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் கொப்பாலில் உள்ள துங்கபத்ரா அணையில் 19வது மதகின் ஷட்டர் உடைந்தது. முல்லைப்பெரியாறு அணையும், துங்கபத்ரா அணையும் சுண்ணாம்பு கலவை, சுருக்கி உள்ளிட்ட பொருட்களால் ஒரே தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட அணைகளாகும். அதனால் துங்கபத்ரா அணையின் ஷட்டர் உடைந்தது போல் முல்லைப் பெரியாறு அணையும் உடையும் என தற்போது அம்மாநில அரசியல்வாதிகள் தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனால் பெரியாறு அணை பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் நிலையுள்ளது.
13 hour(s) ago | 15