மேலும் செய்திகள்
கேரள சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., சாதிக்குமா?
21 hour(s) ago | 19
ஈரோடு த.வெ.க., கூட்டத்துக்கு போலீசார் விதித்த 84 நிபந்தனைகள்!
21 hour(s) ago | 3
உடுமலை : உடுமலை அமராவதி அணையிலிருந்து, இரு வாரமாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆடிப்பெருக்குக்காக, இரு கரை தொட்டு நீர் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பழைய ஆயக்கட்டு, 8 ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு, கடந்த ஜூன், 24 முதல் நீர் வழங்கப்பட்டு வருகிறது.அதே போல், அலங்கியம் முதல் கரூர் வரை உள்ள, 10 வலது கரை, பழைய ஆயக்கட்டு பாசன வாய்க்கால்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களிலுள்ள நிலைப்பயிர்களை காப்பாற்றும் வகையில், 15 நாட்கள் நீர் திறக்க அரசு உத்தரவிட்டது.அதன் அடிப்படையில், பிரதான கால்வாயில், வினாடிக்கு, 440 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில் அமைந்துள்ள, அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த, 18ம் தேதி, அணை நிரம்பி, ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது.தொடர்ந்து, அணை நீர்வரத்து கண்காணிக்கப்பட்டு, கடந்த, 14 நாட்களாக உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து, நீர்வரத்து திடீரென அதிகரித்து வருகிறது. இவ்வாறு, ஒரு சில நேரங்களில், வினாடிக்கு, 7 ஆயிரம் முதல், 15 ஆயிரம் கன அடி வரை ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.இதனால், ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு வெள்ள நீர் ஓடி வருவது, கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. அணை நீர்மட்டம்
அமராவதி அணையில் நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடியில், 88.52 அடி நீர்மட்டம் உள்ளது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3,913 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 4,047 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து, 4,298 கன அடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வந்தது. சாகுபடி செழிக்கும்
அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்களில், ஆண்டு தோறும், ஆடிப்பெருக்கு திருவிழா பாரம்பரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.நெல், நவதானியங்களில் முளைப்பாலிகை இட்டு, விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக உள்ள அமராவதி அன்னையை வணங்கும் வகையில், ஆடி - 18 ஆடிப்பெருக்கு விழாவாக, இரு கரைகளில் மக்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். நடப்பாண்டு, அணை நிரம்பி, இரு வாரமாக ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், புது வெள்ளத்தில், நடப்பாண்டு சாகுபடி செழிக்கும் என கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
21 hour(s) ago | 19
21 hour(s) ago | 3