உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோவையில் என்ன ஆச்சு... 45 நாட்களுக்கு இதுதான் பேச்சு! தொகுதி நிலவரம் பற்றி தொடரும் விசாரணை

கோவையில் என்ன ஆச்சு... 45 நாட்களுக்கு இதுதான் பேச்சு! தொகுதி நிலவரம் பற்றி தொடரும் விசாரணை

கோவை தொகுதியின் முடிவை அறிவதற்கு, அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, பொது மக்களும் பெரும் ஆர்வத்தோடு உள்ளனர். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால், அவருக்கு ஆதரவானவர்களும், எதிர்ப்பாளர்களும் கோவை தொகுதியின் நிலவரம் குறித்து, கடந்த சில நாட்களாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணை நேற்று மேலும் தீவிரமடைந்தது.கோவையில் எத்தனை மணிக்கு எவ்வளவு ஓட்டு பதிவாகியுள்ளது, நகர்ப்புறத்தில் எப்படியிருக்கிறது, கிராமங்களில் ஓட்டுச்சாவடிகளில் கூட்டம் இருக்கிறதா என்று இங்குள்ள கட்சிக்காரர்கள், உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்துக் கொண்டே இருந்தனர். பணம் கொடுத்த ஏரியாக்களில் மக்கள் வந்து ஓட்டுப்போட்டார்களா என்ற விசாரணையே அதிகமாக இருந்தது.அதேபோல, கோவை மாநகர போலீசாரிடமும், உளவுத்துறையினரிடமும், யாருக்கு சாதகமாக இருக்கிறது என்று, சென்னையிலிருந்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரித்துக் கொண்டே இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.இதற்கிடையில், ஒரு லட்சம் ஓட்டுக்கள் மாயம் என்று பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை கொடுத்த பேட்டியும் வேகமாகப் பரவி, அதைப் பற்றிய விசாரணையும் வேகமெடுத்தது.கோவை தொகுதியில் பதிவான ஓட்டுக்கள் விபரம், இன்று தெளிவாக வெளியாகும் என்பதால், இதை வைத்தும் புதிதாகக் கணக்குப் போடுவதற்குப் பலர் தயாராகவுள்ளனர். ஒவ்வொரு கட்சியினர் போடும் கணக்கும் அவரவர்க்கு சாதகமான விஷயங்களே கணக்கிடப்படும்.ஆனால் மக்களின் கணக்கு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஜூன் 4 வரை காத்திருந்தே ஆக வேண்டும்.இடையிலுள்ள 45 நாட்களுக்கும் இந்த கணக்கும் விசாரணையும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.அதுவரையிலும் அரசியல் கட்சியினருக்கும், ஆதரவாளர்களுக்கும் பதற்றத்துக்கு பஞ்சமிருக்காது!- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பேசும் தமிழன்
ஏப் 20, 2024 19:42

திருட்டு திராவிட மாடல் அழிவு.... கோவை யில் இருந்து தொடங்கட்டும்....... ஜெய்ஹிந்த்


Azar Mufeen
ஏப் 20, 2024 11:44

நீங்க பில்டப் கொடுக்கிற அளவுக்கு ஒண்ணுமேயில்ல நேற்றைய தகவல்படி இளைய சமுதாய ஓட்டுகள் அனைத்தும் சீமான் அவர்களுக்கே சென்றதால்தான் ஒரு லட்சம் வாக்காளர்கள் ஒட்டு இல்லை


Nagendran,Erode
ஏப் 20, 2024 14:16

இந்த தேர்தலோடு மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பழையபடி குப்பை.... சினிமா எடுக்க டைரக்க்ஷன் பண்ண கெளம்பிருவாங்க...


venugopal s
ஏப் 20, 2024 11:42

பாஜகவுக்கு வழக்கம் போல்!


Sampath Kumar
ஏப் 20, 2024 11:03

நிச்சயம் இந்தத்தடவை மிக குழப்பம் தான்


Marshal Thampi
ஏப் 20, 2024 10:44

இது தேர்தல் அதிகாரியின், பாஜக விற்கு எதிரான நடவடிக்கை என்கிறாரோ அமலை என்றாலும் இந்திய கூட்டணிக்கு போகவேண்டிய வாக்குகளை பணம் கொடுத்து வீட்டிலே முடக்கி விட்டனர் பாஜக ஆட்கள் புது தேர்தல் தந்திரம்


Kannappanp
ஏப் 20, 2024 10:15

Election commission,repeat,advadisement,given,vote,added,,but,each party,response,vote,verification


ramesh
ஏப் 20, 2024 07:08

why so many importance to covai, its brand creating


hari
ஏப் 20, 2024 08:36

its covai people worry... whats your problem here


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை