உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சந்தேக வளையத்தில் அ.தி.மு.க., பிரமுகர்: தொண்டாமுத்துாருக்கு சங்கர் போனது ஏன்?

சந்தேக வளையத்தில் அ.தி.மு.க., பிரமுகர்: தொண்டாமுத்துாருக்கு சங்கர் போனது ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'பெண் போலீசாரை தவறாக விமர்சித்து பேட்டியளித்தார் என்பதால், யு டியூபர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சிலர் புகார் அளித்தனர். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கஞ்சா வைத்திருந்தது உட்பட, பல்வேறு வழக்குகள்பதியப்பட்டு உள்ளன. இந்நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரித்த திருச்சி சைபர் க்ரைம் போலீசார், அவருடைய செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தியதாக தெரிகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gxhckf1u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அத்துடன், அ.தி.மு.க., தரப்புடன் நெருக்கமாக இருந்து, தி.மு.க.,வையும், ஸ்டாலின் அரசையும், பெண் போலீசாரையும், பெண் போலீஸ் அதிகாரிகளையும் சமூக வலைதளங்களில் சவுக்கு சங்கர் விமர்சித்தது குறித்தும் கேட்டுள்ளனர். திருச்சி போலீசார் கூறியதாவது:தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, அக்கட்சியையும், ஆட்சியையும் சவுக்கு சங்கர் கடுமையாக விமர்சித்து வந்தார். அப்போதும், சிலருடைய பின்னணியில், இயங்கி இருக்கிறார். தி.மு.க.,வுடன் அந்த சமயத்தில் நட்பாக இருந்த அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாடு எடுத்து செயல்பட துவங்கியுள்ளார். அத்துடன், முன்னாள் அமைச்சர்கள் பலருடன் அவர் தொடர்பில் இருந்துள்ளார். அவர்கள் வாயிலாக பல உதவிகளையும் பெற்றுள்ளார். இதுபற்றி தான், அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், இந்த கேள்விகளுக்கு எல்லாம், அவர் சரியான தகவல்களை தெரிவிக்க மறுத்ததுடன், மாற்றி மாற்றி பேசி, போலீசாரை குழப்பி விட்டார். அதுமட்டுமின்றி, சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட பின், அவருடைய மொபைல் போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள் முழுதும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.குறிப்பாக, கைது செய்யப்படுவதற்கு பல நாட்களுக்கு முன்னும் பின்னும், சவுக்கு சங்கர் கோவைக்கு சென்று வந்துள்ளார். கோவை தொண்டாமுத்துார் தொகுதியில், அவர் இருந்ததை, மொபைல் போன் டவர் வாயிலாக கண்டறிந்தோம். அங்கு இருக்கும் அ.தி.மு.க., முக்கிய பிரமுகர் ஒருவரை தான் அவர் சந்தித்துள்ளார் என்பதையும் கண்டறிந்து உள்ளோம். குறிப்பிட்ட அந்த முக்கிய பிரமுகரின் உறவுக்கார பையன் வீட்டு திருமணம் சமீபத்தில் நடந்தது. அதற்காகவும், சவுக்கு சங்கர் கோவைக்கு சென்று திரும்பியுள்ளார். ஆனால், விசாரணையின் போது அந்த விபரங்கள் குறித்து, உருப்படியான தகவல் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. இதனால், அந்த முக்கிய பிரமுகருக்கும், சவுக்கு சங்கருக்கும் இருக்கும் நெருக்கம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். நெருக்கத்தை வெளிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் கிடைத்தால், முக்கிய பிரமுகரை விசாரணைக்கு அழைப்பது குறித்து யோசிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Vivek
மே 21, 2024 08:00

சனாதனத்தை ஒழிப்போம் என பேசி மதக்கலவரத்தை தூண்டுபவர் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசியவர் க்கும் சட்டம் அதன் கடமையை செவ்வனே செய்யாது காரணம் யாவரும் அறிந்ததே


Vivek
மே 21, 2024 07:56

இப்ப கருத்து சுதந்திரம் எங்கே?? இந்த தக்காளி சட்னி இரத்தம் ஜோர்தான் இப்ப கருத்து சுதந்திரம் சூப்பராக சட்டம் அதன் கடமையை செய்கிறது


sankaranarayanan
மே 21, 2024 00:36

தமிழகத்தில் நடந்தது நடப்பது நடக்கப்போவது எல்லாமே ஒன்று மன்னர் குடி திருவாரூர் அம்சமாகத்தான் இருக்கும் இல்லையே அடுத்தாக மன்னார் குடி அம்சமாகத்தான் இரும் இது தமிழகத்தின் தலைவிதி யாராலும் மாற்றவே முடியாது


sureshpramanathan
மே 20, 2024 10:20

Thiruttu DMK wasting police time to shut media against them All DMK need to go to jail on so many cases including drugs Time is coming soon June 4 th


RAMAKRISHNAN NATESAN
மே 20, 2024 09:45

அயலக மெத் விற்பனைப்பிரதிநிதி மன்னர் குடும்பத்துக்கு நெருக்கமானவனாக வளைய வந்துள்ளான் ஆனால் சவுக்கு சங்கருக்கு குண்டாஸ்


கிருஷ்ணன்_பொள்ளாச்சி
மே 20, 2024 07:11

இங்க ஒருத்தர் கூடவே சேர்ந்து தொழில் செய்வார் ஆனால் அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார் அதை கேட்டால் கூட பிரயோஜனம் உண்டு அதை விடுத்து இப்படி உப்பு சப்பு இல்லாத விசயத்தில் 100 பேர் வரை விசாரிப்பது வியப்பாக உள்ளது


N Sasikumar Yadhav
மே 20, 2024 03:33

சவுக்கு சங்கரால் புகார் சொல்லப்பப்ட ஆட்கள் உத்தமர்களா


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை