உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ம.தி.மு.க., அதிருப்தியாளர்களுக்கு வலை விரித்துள்ள அ.தி.மு.க.,

ம.தி.மு.க., அதிருப்தியாளர்களுக்கு வலை விரித்துள்ள அ.தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ம.தி.மு.க., அதிருப்தியாளர்களை இழுக்க, அ.தி.மு.க., மாவட்டச் செயலர்களுக்கு, அக்கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இரு லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா 'சீட்' கேட்டு, ம.தி.மு.க., மனு அளித்துள்ளது. அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் சிலர், லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புகின்றனர். ஆனால், கட்சியின் முதன்மைச் செயலர் துரை வைகோவுக்கு மட்டும் ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்ய, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.'தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் அதிருப்தியடைகிற முக்கிய நிர்வாகிகளை, அ.தி.மு.க.,வுக்கு இழுத்து வாருங்கள்' என, மாவட்டச் செயலர்களுக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.மேலும், வாரிசு அரசியலை எதிர்த்து வெளியேறியுள்ள ம.தி.மு.க., நிர்வாகிகள் சிலர், தி.மு.க.,வில் இணைவதற்கு தயாராக உள்ளனர்.ஆனால், கூட்டணி தர்மம் காரணமாக, அவர்களை சேர்க்க தி.மு.க., தயங்குகிறது. எனவே, அவர்களை அரவணைக்க பழனிசாமி தயாராக உள்ளார். அதன்படிசமீபத்தில் கரூர் நகர ம.தி.மு.க., செயலர் கபிணி, கே.சி.பாலச்சந்திரன் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.கரூர் மாவட்டத்தை தொடர்ந்து, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் அதிருப்தியாக இருக்கிற ம.தி.மு.க., நிர்வாகிகளை இழுக்கும் வேலையையும் அக்கட்சியினர் துவக்கி உள்ளனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Bye Pass
பிப் 23, 2024 23:03

ஆட்டோல போற அளவுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ..


Sivaraman
பிப் 23, 2024 21:31

அதிமுக கூட்டணிக்கு மிகவும் கஷ்டப்படுகிறது தோல்வி மேல் தோல்வி அடைந்து வரும் அதிமுக எடப்பாடி வலை வீசுவது நன்கு அறிய முடிகிறது . சிக்குவார்களா ? சிக்கினாலும் வெற்றி பெறுவது மிகக் கடினம்


தாமரை மலர்கிறது
பிப் 23, 2024 20:06

வைகோவை சீண்டுவோர் யாருமில்லை. திமுகவில் மதிப்பில்லை. அதனால் எடப்பாடியிடம் சரணடையலாமா என்று வைகோ யோசிக்கிறார். எடப்பாடிக்கு சீமானுடன் தான் போட்டி. பிஜேபி அணிக்கும் திமுக அணிக்கும் தான் இந்த தேர்தல் போட்டி நடக்க போகிறது. அதனால் பிஜேபி அணியில் வைகோ இணைவது நல்லது.


M Ramachandran
பிப் 23, 2024 18:56

பழனிக்கு வேறு யாரும் கிடைக்கலையா? பாவம் பரிதாபம்


Mohan das GANDHI
பிப் 23, 2024 18:02

தமிழ்நாட்டின் 2024 MP தேர்தலுக்கு போட்டியிடும் இரு திராவிட கட்சிகளும் அதன் கூட்டணிகளும் கண்டிப்பாக டெபாசிட் இழப்பார்கள் காரணம் தமிழக மக்கள் மழை வெள்ளத்தால், விலைவாசி உயர்வால் இவர்கள் செய்த அநியாய ஊழலால் பட்ட கஷ்டங்கள் மறக்கமுடியாதது? SYA NO டம்ளக் & ADMK CORRUPTED PARTIES. ONLY BJP ANNAMALAI IPS and BJP ALLIANCES PARTIES WILL WIN THIS 2024 MP ELECTION MORE THAN 35 MP'S IN TAMILNADU.


Narayanan
பிப் 23, 2024 15:14

யாருக்கும் பயனில்லை. அதிமுகவில் சேர்ந்தால் மட்டும் என்ன வாரி வழங்கிவிடுவாரா ? மேலும் அந்த கட்சியில் இன்னும் இருப்பவரே ஒன்று அல்லது இரண்டுபேர்கள்தான் . கட்சி பெயரைவைத்து கூட்டணியில் காசுபார்க்கவே இருக்கிறார். வைகோ


sankar
பிப் 23, 2024 14:52

ஆவியா அலைகின்ற கட்சியுடன் பாவிகூட பேசமாட்டான்


duruvasar
பிப் 23, 2024 14:34

வலை வாங்குடீங்களா , ஸ்டாலின் ஓகே சொன்னாரா ? மாமனை கேட்பதில் தவறொன்றும் இல்லை.


SUDHAKAR JANAKIRAMA RAO
பிப் 23, 2024 12:46

மதிமுகவில் வாரிசு அரசியலை எதிர்த்து வெளியேறி திமுகவில் சேறுகின்ற மதிமுக தொண்டர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதே புரியவில்லை? ஏனென்றால் வாரிசு அரசியலுக்கு வித்திட்டதே திமுக தான்


திகழ்ஓவியன்
பிப் 23, 2024 13:09

அது ஒரு கட்சி அதற்கு எதிர்ப்பாளர்கள் அவர்கள் இங்கு வந்தவுடன் வோட்டு விழிந்திடும் நல்ல காமெடி


sridhar
பிப் 23, 2024 12:02

தொகுதிக்கு நூறு வோட்டு கூட இல்லாத கட்சிக்கு தேவை இல்லாத முக்கியத்துவம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை