மேலும் செய்திகள்
விஜய்க்கு யாரோ சொல்லி கொடுத்துள்ளனர்: திருமா
15 hour(s) ago | 45
பா.ஜ., தேசிய செயல் தலைவராக நிதின் நபினை தேர்வு செய்த மூவர்
16 hour(s) ago | 2
தீவிரமடையும் காற்று மாசு; சுவாசிக்க திணறும் தலைநகரம்
20 hour(s) ago | 7
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது.பா.ஜ. உடனான உறவை முறித்துள்ள அ.தி.மு.க. வரும் லோக்சபா தேர்தல் மட்டுமின்றி 2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலிலும் பா.ஜ. உடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jmktvy9c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும் பா.ஜ. உடனான உறவை முறித்துக் கொண்டதால் சிறுபான்மையின மக்கள் ஓட்டுகளை கவர பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. நீண்ட காலம் சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.அ.தி.மு.க. மாணவர் அணி நிர்வாகிகள் கூட்டத்திலும் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி பொதுக்கூட்டத்திலும் பழனிசாமி பங்கேற்றார்.சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவான கட்சி அ.தி.மு.க. என அக்கட்சி தலைமை கூறி வரும் நிலையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க பழனிசாமிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றால் சிறுபான்மையின மக்கள் நம்பிக்கையை இழக்க நேரிடும். கும்பாபிேஷகத்திற்கு செல்லாவிட்டால் ஹிந்து மக்களுக்கு விரோதமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழும். இதனால் இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் அக்கட்சி தலைமை தவித்து வருகிறது.எந்த கேள்வி கேட்டாலும் பதில் அளிக்கும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் அ.தி.மு.க. பங்கேற்குமா என்று கேட்டால் இது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் என நழுவி விடுகிறார்.நேற்றுமுன்தினம் அ.தி.மு.க. பொதுச் செயலர் பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது 'அ.தி.மு.க. கட்சி ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது; பாகுபாடு பார்ப்பதில்லை. யார் வேண்டுமானாலும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளலாம்.'எனக்கு கால் வலி இருக்கிறது. வாய்ப்பிருந்தால் கும்பாபிேஷகத்தில் நானும் கலந்து கொள்வேன்' என தாமரை இலை தண்ணீர் போல் பதில் அளித்தார்.அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் கே.பி.முனுசாமி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தபோது ''பழனிசாமிக்கு உடல் நலம் சரியான பிறகு ராமர் கோவில் கும்பாபிேஷகத்திற்கு செல்வது குறித்து முடிவெடுப்பார்'' என்றார்.நேற்று வரை ராமர் கோவில் கும்பாபிேஷகத்திற்கு செல்வது குறித்து அ.தி.மு.க. தலைமை எந்த முடிவையும் எடுக்கவில்லை.- நமது நிருபர் -
15 hour(s) ago | 45
16 hour(s) ago | 2
20 hour(s) ago | 7