உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராமர் கோயில் திறப்பை திமுக எதிர்க்கவில்லை: சொல்கிறார் உதயநிதி

ராமர் கோயில் திறப்பை திமுக எதிர்க்கவில்லை: சொல்கிறார் உதயநிதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ராமர் கோயில் திறப்பை திமுக எதிர்க்கவில்லை எனவும், மதத்திற்கோ, நம்பிக்கைக்கோ எதிர்ப்பு இல்லை என்றும் அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு வரும் ஜன.,21ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளதை ஒட்டி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் இருந்து சுடர் ஓட்டத்தை துவக்கிவைத்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6ciex1ie&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் செய்தியாளர்களிடம் உதயநிதி கூறியதாவது: இந்த சுடர் ஓட்டம் இன்று துவங்கி அடுத்த இரண்டு நாட்களுக்கு சேலம் வரை சுமார் 310 கிலோ மீட்டர் இந்த சுடர் கொண்டு செல்லப்படுகிறது. இனி இந்திய வரலாற்றில் இதுபோன்ற மாநாடு நடத்த முடியாது என காண்பிக்க வேண்டும். கூடி கலைந்த கூட்டம் அல்ல, கொள்கை கூட்டம் என்பதை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.ராமர் கோயில் திறப்பு விழா குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''ராமர் கோயில் திறப்பை திமுக எதிர்க்கவில்லை. ஏற்கனவே கருணாநிதி சொன்னது போல மதத்திற்கோ நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. ராமர் கோயில் வந்தது பிரச்னை அல்ல, அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதில் திமுக.,விற்கு உடன்பாடு இல்லை. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கூறியதை போல ஆன்மிகத்தையும், அரசியலையும் ஒன்றாக்க வேண்டாம்'' என்றார்.ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் கால் வலி காரணமாக ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறியுள்ளது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, ''அவர் தவழ்ந்து தவழ்ந்து போவதால் அவருக்கு அடிக்கடி கால் வலி வருகிறது'' என நக்கலாக பதிலளித்தார் உதயநிதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

Sathyasekaren Sathyanarayanana
ஜன 25, 2024 07:53

எங்கே எதிர்த்துத்தான் பாரேன். திருட்டு திராவிட கொள்ளையர்கள். நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய பின்னும் வாய்க்கொழுப்பு அடங்க வில்லை. இந்த திருத்து திராவிட காட்சிகளில் இருக்கும் ஹிந்துக்கள் யாராவது கோவில் பக்கம் வந்தால் விரட்டி அடிக்கவேண்டும்.


கணபதி
ஜன 18, 2024 23:01

பச்சோந்தியை மனித உருவில் பார்க்கிறோம்


ஆதிநாராயணன்
ஜன 18, 2024 22:57

ராமர் கோவிலை எதிர்ப்பதற்கு தி.மு.க‌ யார்


vnatarajan
ஜன 18, 2024 22:44

திருட்டுப்போன பொருளை மீட்டெடுத்து உரியவர்களிடம் திருப்பிக் கொடுப்பது போலதான் கோயில் இருந்த இடத்தையும் மீட்டெடுத்து உரியவர்களிடம் கொடுத்து இருக்கிறார்கள் .பெரும்பாலான முஸ்லிம்கள் இதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என நம்புவோமாக


Mahendran TC
ஜன 18, 2024 22:09

அப்போ ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துக்க வேண்டியதுதானே ?


Sathyasekaren Sathyanarayanana
ஜன 19, 2024 07:16

இந்த மதம் மாறிய திருடர்கள் கலந்துகொள்ளவேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தேவையே இல்லை.


BalaG
ஜன 18, 2024 21:53

இல்லை எதிர்த்துதான் பார்க்கட்டுமே


ravi
ஜன 19, 2024 00:04

அதுதானே. எதிர்த்து தான் பாரேன். ஏற்கனவே உங்க கட்சியில் உள்ள நல்ல இந்துக்கள் பிஜேபியில் சேர்ந்தாச்சு


MARUTHU PANDIAR
ஜன 18, 2024 21:25

ஏன்,,, எதிர்த்தே ஆகணும்னு ஏதாவது சட்டமா?பாசிட்டிவ் ஆக பேசாத குரூப்பு+++ ஆதரிக்கிறேன்னு சொல்ல மாட்டாங்க,, ஆனால் எதிர்க்க வில்லையாம்+++ எதிர்த்திருந்தால் அவ்வளுவு தான் ,ராமர் கோயில் திறப்பு விழாவே ஸ்தம்பித்திருக்கும் போல+++பரவா இல்ல, பெரிய மனசு பண்ணிட்டாரு.++++ராமர் இவுங்க தயவால தப்பிச்சாரு, அப்படீன்னு பேசிக்கறாங்க.


PREM KUMAR K R
ஜன 18, 2024 21:03

சிறுவனாக இருந்த விளையாட்டுதனம் வாலிபனாக மாறிய பிறகும் இன்னமும் போகாத காரணத்தால் தான் உதயநிதியை அவரது தந்தை அந்த துறைக்கே அமைச்சராக்கி அழகு பார்ப்பதில் நமக்கும் மகிழ்ச்சியே. ஆனால் அதற்காக மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டியதாக ஒரு கட்டு கதையை விளையாட்டாக கூட உதயநிதி கூறுவதை நம்மால் ஏற்று கொள்ள முடியாது. ராமர் ஆலயம் இருந்த இடத்தில் தான் அது இடிக்கபட்டு மசூதி கட்டப்பட்டது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தால் உச்ச நீதிமன்றமே அதை ஒப்பு கொண்டு ராமர் கோவில் கட்ட முழு அனுமதி தரும் தீர்ப்பை தந்தது. அதனால் தான் ராமர் ஆலயம் நிர்மாணம் செய்யபட்டு இந்த மாதம் 22ம் தேதி ராம் பக்தரான நமது பாரத பிரதமர் கைகளால் திறக்கப்பட இருக்கிறது.


M S RAGHUNATHAN
ஜன 18, 2024 20:57

உதய நிதி அவர்கள் அயோத்தியா வழக்கு விஷயத்தை முதலில் இருந்து படிக்க வேண்டும். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து வழக்கு நடைபெற்று வந்தது. ஆங்கிலேய நீதிபதி இந்த பாப்ரி கட்டிடத்தில் நமாஸ் நடைபெற்றதாக சான்றுகள் இல்லை என்று கூறியிருக்கிறார். பாபர் அவர் சுய சரிதையில் கோயில்.இடிக்கப்.பட்டு ஒரு வெற்றி தூண் ,( victory pillar) நட்டதாக த்தான் குறிப்பிட்டு இருக்கிறார். உதயநிதி உச்ச நீதி.மன்ற தீர்ப்பை முழுவதும் ஆக ( கடைசியில் இருக்கும் Addenda சேர்த்து).படித்தால் உண்மை தெரியும். வேண்டும்.என்றால்.advocate general.துணையுடன் அதன் சாராம்சத்தை தெரிந்து கொண்டு பேசவும். மந்திரி என்றால் கண்டபடி உளரக்கூடாது.


g.s,rajan
ஜன 18, 2024 20:57

வேறு வழி இல்லை ,பாவம் ....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை