உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சிபாரிசு இருந்தால்தான் பைலையே தூசு தட்றாங்க..

சிபாரிசு இருந்தால்தான் பைலையே தூசு தட்றாங்க..

மதுரை : தமிழக காவல்துறையில் துறை ரீதியான நடவடிக்கைக்குள்ளான போலீசார், அமைச்சு பணியாளர்களின் தண்டனையை ரத்து செய்யகோரும் பைல்களை சிபாரிசு இருந்தால் மட்டுமே டி.ஜி.பி., அலுவலகம் பரிசீலிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகின்றனர்.காவல் துறையில் கவனக்குறைவாகவோ, ஒழுங்கீனமாகவோ, சட்டத்திற்கு புறம்பாக நடந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது சஸ்பெண்ட், பதவி உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விசாரணைக்கு பின் தவறு இல்லாதபட்சத்தில் தண்டனையை எஸ்.பி., முதல் டி.ஜி.பி., வரையிலான அதிகாரிகள் ரத்து செய்ய அதிகாரம் உண்டு. சிலர் நீதிமன்றம் மூலம் 'தண்டனை ரத்து' உத்தரவு பெறும்பட்சத்தில் டி.ஜி.பி., கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. துறை ரீதியான தண்டனை பெற்ற நுாற்றக்கணக்கானோரின் மேல்முறையீட்டு மனுக்கள் டி.ஜி.பி., அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகின்றனர்.

பாதிப்பு

அவர்கள் கூறியதாவது: எங்களின் கடைசி நம்பிக்கை டி.ஜி.பி., அலுவலகம்தான். ஆனால் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பைல்கள் நகராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அமைச்சர்கள், உயரதிகாரிகள் சிபாரிசு செய்தால் உடனடியாக அந்த பைல்களை 'துாசி' தட்டி தண்டனையை ரத்து செய்து உத்தரவிடுகிறார்கள். சிபாரிசு இல்லாதபட்சத்திலும், நீதிமன்றம் மூலம் உத்தரவு வாங்கினாலும் அந்த பைல்களை அதிகாரிகள் பொருட்படுத்துவதில்லை. இதனால் எங்களது பதவி உயர்வு உள்ளிட்டவை பாதித்துள்ளது. எங்களுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் இன்று பதவி உயர்வு பெற்று விட்டார்கள். நாங்கள் இன்னும் டி.ஜி.பி., அலுவலகத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Raa
ஜன 03, 2024 14:28

தப்பு பண்ணாமல் இருங்களேன்?


duruvasar
ஜன 03, 2024 12:24

இதில் ஜாதி,மத அடிப்படையிலும் கோப்புகள் நகர்தப்படுகின்றன என்ற பேச்சும் இருப்பதாக கூறுகிறார்கள்.


VENKATASUBRAMANIAN
ஜன 03, 2024 08:40

ஊழலின் மொத்த உருவம்


அப்புசாமி
ஜன 03, 2024 08:39

திருட்டு போலுஸ். இவங்களை திரும்ப வேலைக்கு வெச்சு தொழிலை கண்டிநியூ பண்ண உடணுமா?


Ramesh Sargam
ஜன 03, 2024 06:39

போலீசுக்கே இந்த நிலை என்றால், பொதுமக்களின் பிரச்சினைகள் எந்த கதியில் விசாரிக்கப்படும்?


Kasimani Baskaran
ஜன 03, 2024 05:02

தப்பில்லாமல் தப்புச்செய்பவர்கள்தான் மாடல் அரசுக்கு வேண்டும். தத்திகளை வைத்து அவர்கள் என்ன செய்ய முடியும் (மைண்ட் வாய்சில் என்னென்னவெல்லாம் வருகிறதோ அதையெல்லாம் கற்பனை செய்து புளங்காகிதம் அடைந்து கொள்ளவும்)?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ