உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தே.ஜ., கூட்டணி அமைக்க இ.பி.எஸ்., உடன் வாசன் பேச்சு

தே.ஜ., கூட்டணி அமைக்க இ.பி.எஸ்., உடன் வாசன் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தி.மு.க., கூட்டணியை வீழ்த்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., உடன் த.மா.கா., தலைவர் வாசன் நடத்திய சமரச பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிகிறது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின், 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு பொதுக்கூட்டம், பல்லடத்தில், வரும் 27ம் தேதி நடக்கவுள்ளது.

அழைப்பு

அந்த மேடையில், தி.மு.க., அணியை எதிர்க்கும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை ஏற்றி, தேர்தல் பிரசார கூட்டமாக நடத்த, தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளது.பிரதமர் மோடி பங்கேற்கும் இக்கூட்டத்திற்கு வரும்படி, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, த.மா.கா., தலைவர் வாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பா.ம.க., தலைவர் அன்புமணி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுசெயலர் தினகரன், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா ஆகியோரையும் அழைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இந்த தலைவர்களுடன் பா.ஜ., நடத்தும் பேச்சு முடிவடையும் பட்சத்தில், அவர்களும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

வலியுறுத்தல்

இதற்கிடையில், அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்.,சை, அவரது சென்னை வீட்டில் வாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, 40 நிமிடங்கள் நீடித்தது.நாட்டின் நலன் கருதியும், எதிரியை வீழ்த்தும் அடிப்படையிலும், தமிழகத்தில் மெகா கூட்டணி அமைக்க, மீண்டும் அ.தி.மு.க., - பா.ஜ., கைகோர்க்க வேண்டும் என, இ.பி.எஸ்., இடம் வாசன் வலியுறுத்தி உள்ளார். ஆனால், இ.பி.எஸ்., தரப்பில் பிடி கொடுக்கவில்லை என, த.மா.கா.,வினர் தெரிவித்தனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

sankaranarayanan
பிப் 17, 2024 20:35

அதிமுக கட்சி இப்போது பழனிசாமியால் பரிதவித்துக்கொண்டிருக்கிறது பாவம் பழனி சென்று மொட்டை அடித்துக்கொள்வார்கள் ஆனால் இந்த பழனியை அண்டியவர்கள் அனைவரும் மொட்டை அடித்துக்கொள்ளும் நேரம் வந்தாகிவிட்டது தாமதம் கழிக்காமல் வெளியேறுங்கள்


Godfather_Senior
பிப் 17, 2024 20:24

மூப்பனாருக்கு எப்படியெல்லாம் அவப்பெயர் ஏற்படுத்தலாம் என்று வாசன் யோசிக்கிறார்போலும்


கடல் நண்டு
பிப் 17, 2024 17:29

தனக்கு கொம்பு சீவி விடும் அரசியல் அடிப்படை அறியாத சில பேச்சை நம்பி, தான் தமிழகத்தின் பெரிய ஆளுமை (?) என எண்ணி தவறான சில முடிவுகளை எடுத்துவருகிறார்... பாவம் .. அதிமுக -


sridhar
பிப் 17, 2024 17:22

அதிமுக இப்போது திமுகவுடன் நட்பு கொண்டுள்ளது.


K.Ramakrishnan
பிப் 17, 2024 17:02

பா.ஜனதா மிரட்டலால் அ.தி.மு.க.விடம் எம்.பி. பதவியை இனாமாக பெற்றவர் எல்லாம் பேசக்கூடாது.


S.F. Nadar
பிப் 17, 2024 15:41

தகப்பனார் காலத்தில் , தி மு கா கூட்டணியில் எப்படி இருந்த கட்சி தா மா கா . இப்போ இவ்வளவு தரை மட்டமாக போய்விட்டது


Anbuselvan
பிப் 17, 2024 15:34

பாஜக தமிழகத்தில் நன்கு வேரூன்றி விட்டது என்பது தெள்ள தெளிவாக கண்கூட தெரிகிறது. அது தேர்தலில் நிச்சயம் வெளிப்படும். சுமார் 20 % ஓட்டுக்கள் இப்போதைக்கு அவர்களிடம் இருக்கிறது. சில சர்ப்ரைஸ் விஷயங்களை செய்து அதை 25 % ஆக மாற்ற அவர்களிடம் போதிய திட்டங்கள் உள்ள போதிலும் அதை இப்போது பயன் படுத்துவார்களா இல்லை 2026 தேர்தலில் பயன்படுத்துவார்களா என இப்போது தெரியாது. இப்போது சிலவற்றை பயன் படுத்துவதுதான் 2026 க்கு அஸ்திவாரம் போடுவதாக அமையும் என்பது பொது ஆதரவாளர்கள் கருத்தாக அமைய கூடும்.


rama adhavan
பிப் 17, 2024 15:04

அதிமுக இங்கு இப்போது ஆளுமையோ, வசீகரமோ இல்லாத தலைமையின் கீழ் உள்ளது. இனி MGR, JAYALALITHAA போல் தலைவர்கள் வர வாய்ப்புகளே இல்லை. இக் கட்சி மேலும் பிளவு படவே வாய்ப்பு உள்ளது. எனவே இக்கட்சியுடன் BJP கூட்டணி வைக்காது.


duruvasar
பிப் 17, 2024 15:02

எடப்பாடி, சேலம் , ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் செங்கல்பட்டு என எல்லா ஊரையும் தாண்டி இப்போ கிளாம்பாக்கத்துல ட்ராபிக் ஜாம் ஆனதால் இப்போது அங்குதான் யிருக்கிறார். சென்னை வந்தவுடன் பயணமும் முடிந்துவிடும்.


s.sivarajan
பிப் 17, 2024 15:02

திராவிட கட்சிகளுடன் கூட்டணிக்கு முயற்சித்தால் அண்ணாமலையின் உழைப்பு எல்லாம் வீணாகும்


Anbuselvan
பிப் 17, 2024 16:00

மிக சரியாக சொன்னீர்கள். BJP தனக்கென ஒரு அந்தஸ்த்தை அடையாமலேயே ஏற்படுத்தாமல் அண்டி பிழைக்கும் வழியையே செய்ய வேண்டி இருக்கும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை