உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மன்சூர் அலிகானை கட்சியில் சேர்க்க செல்வப்பெருந்தகை தயங்குவது ஏன்?

மன்சூர் அலிகானை கட்சியில் சேர்க்க செல்வப்பெருந்தகை தயங்குவது ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை நடத்தும் நடிகர் மன்சூர் அலிகான், காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்து, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கடிதம் கொடுத்து பல வாரங்களாகியும், அவர் கட்சியில் சேர்க்கப்படாததால், நேற்று முன்தினம் அவர், சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கே வந்து விட்டார். அவரை சேர்க்க, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. இதுகுறித்து, காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: மன்சூர் அலிகான், சினிமாவில் வில்லனாக நடித்தாலும், நிஜ வாழ்க்கையில் தன்னை ஒரு காமெடியனாகவே காட்டிக் கொள்கிறார்.தனி கட்சி நடத்தினாலும், அவருக்கென பெரிய அளவில் ஆதரவாளர்கள் இல்லை. தன் கட்சி சார்பில், லோக்சபா தேர்தலில் வேலுாரில் போட்டியிட்டார். அதற்கு பின்னணியில், பா.ஜ., இருப்பதாக பேச்சு கிளம்பியது. வேலுார் தொகுதியில் பிரதானமாக இருக்கும் முஸ்லிம்கள் ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு கிடைக்காது. மன்சூர் அலிகான் போட்டியிடுவதன் வாயிலாக, முஸ்லிம் ஓட்டுகளில் குறிப்பிட்ட சதவீதம், தி.மு.க.,வுக்கு செல்லாமல் தடுக்க முடியும் என்பதை கணக்கிட்டு, பா.ஜ., தரப்பில் திட்டமிட்டு, மன்சூரை நிறுத்தியதாக கூறப்பட்டது.இச்சூழலில், மன்சூரை தேர்தலுக்கு பின் காங்கிரசில் இணைத்தால், 'இண்டியா' கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை வகிக்கும் தி.மு.க., கோபம் கொள்ளும். அதோடு, ஏற்கனவே காங்கிரசில் இருந்த மன்சூர் அலிகான், திடீரென விலகிச் சென்று, காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். ஏன் கட்சியில் இருந்து விலகினார் என்பது இதுவரை தெரியாமலேயே உள்ளது. அதேபோல, தன்னோடு, லியோ படத்தில் நடித்த நடிகை த்ரிஷாவை சமீபத்தில் விமர்சித்தது, சினிமா வட்டாரங்களை கடந்து கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல முனைகளில் இருந்தும் நெருக்கடி அதிகமானதும், த்ரிஷாவிடம் மன்னிப்பு கோரினார்; கோர்ட் கண்டனத்துக்கும் ஆளானார்.தன் மனதில் பட்டதை சொல்கிறேன் என்ற பெயரில், பெண்களை கொச்சையாக விமர்சிக்கக் கூடிய மன்சூர் அலிகானை கட்சியில் சேர்த்து, அவர் இதுபோன்ற சர்ச்சைகளை தொடர்ந்து உருவாக்கினால் என்ன செய்வது என, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை யோசிப்பதாக தெரிகிறது.இதனால் தான், வலிய வந்து சேர முயற்சிக்கும் மன்சூர் விவகாரத்தில், எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். அவரை கட்சியில் சேர்க்க வேண்டாம் என, இரண்டாம் கட்டத் தலைவர்களும், மகளிர் அணி பிரமுகர்கள் பலரும் செல்வப்பெருந்தகையிடம் வலியுறுத்தி வருவதால், மன்சூரை கட்சியில் சேர்க்க தயக்கம் காட்டுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

kulandai kannan
ஏப் 27, 2024 23:17

கடந்த சட்டமன்றத் தேர்தலில், வேலுமணி தயவில் தொண்டாமுத்தூர் ல் போட்டியிட்டார்.


venugopal s
ஏப் 27, 2024 20:56

இவர் உளறல் பேச்சைக் கேட்கும் போது இவர் பாஜகவுக்கு தான் பொருத்தமானவர் என்று தோன்றுகிறது!


venugopal s
ஏப் 27, 2024 16:29

வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதையாக ஆகப்போகிறது!


theruvasagan
ஏப் 27, 2024 10:33

சேருமிடம் அறிந்து சேர வருகிறார். அவரை சேரத்துக் கொள்ள என்ன தயக்கம்.


கருத்து சுந்தரம்
ஏப் 27, 2024 09:50

இரண்டு மாதங்களுக்கு முன் இவரை காங்கிரஸில் சேர்த்திருந்தால் அந்தக் கட்சி 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றி இருக்கும்.


குமரி குருவி
ஏப் 27, 2024 07:11

வேலியில் போற ஓணான் மன்சூர் காங்கிரஸ் கட்சியில் சேர்த்தால் கட்சி கல கலக்கும்


kannan sundaresan
ஏப் 27, 2024 06:55

இவரது நடவடிக்ககள் மிகவும் மோசம். தான் இருப்பதை மற்றவர்களுக்கு தெரிவிக்க இந்தமாதிரி சர்ச்சை பேச்சுக்களை வெயாடுகிறார்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை