உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்ணை தாக்கிய மூன்று பேர் கைது

பெண்ணை தாக்கிய மூன்று பேர் கைது

காரைக்கால் : பெட்ரோல் பங்கில் பணியாற்றும் பெண்ணை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் நெடுங்காடு பருத்திக்குடி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி லோகம்பாள், 37; இவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பம்ப் ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் லோகம்பாள் பணியில் இருந்த போது, இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர் ரூ.70 க்கும் , மேலும் ஒருவர் ரூ.100க்கு பெட்ரோல் பேட்டுள்ளனர்.ஆனால் பணம் கொடுக்கவில்லை இதனால் லோகம்பாள் பணத்தை கொடுக்கும் படி கோட்டபோது பைக்கில் வந்த மூவரும் லோகம்பாளை திட்டித் தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் நெடுங்காடு போலீசார் பெண்ணை தாக்கிய ஆபெல், சுபாஷ் , மகேந்திரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி