உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாயம்

புதுச்சேரியில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையம் அருண் நகரை சேர்ந்தவர் முருகன் மகள் நந்தினி, 22. கடந்த 16ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அதே போல, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் மகள், ரசிகா, 20. இவர் புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லுாரி விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த 21ம் தேதி விடுதியில் இருந்து வெளியில் சென்றவர் காணாமல் போனார். வில்லியனுார் அடுத்த பங்கூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன், 62; கடந்த 21ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவரை காணவில்லை.இது குறித்த புகார்களின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்