| ADDED : ஏப் 23, 2024 04:59 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் பல்வேறு வகைகளில் 4 பேரிடம் ரூ. 5.38 லட்சம் பணம் மோசடி செய்த கும்பளை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.புதுச்சேரியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணா, இவரின் மொபைல் எண்ணில், போலீஸ் அதிகாரி போன்று மர்ம நபர் ஒருவர் பேசினார். அதில், உங்களுக்கு தைவான் நாட்டில் இருந்து பார்சல் ஒன்று வந்துள்ளது. அதில், சட்ட விரோதமாக பொருட்கள் இருக்கிறது. அதற்கு நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும். இல்லை என்றால், உங்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டினார். அதற்கு பயந்த அவர், 5 லட்சம் ரூபாயை தனது வங்கி கணக்கில் இருந்து அனுப்பினார். அதன் பின்னர் அவரிடம் பேசிய நபர் போலியான போலீஸ் அதிகாரி என தெரியவந்தது.இவரை தொடர்ந்து, வைத்தியநாதன். இவர் ஓ.எல்.எக்ஸில், குறைந்த விலைக்கு பர்னிச்சர் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் வந்துள்ளது. அதில், இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டார். பர்னிச்சர் வேண்டும் என்றால், முன்தொகை அனுப்ப வேண்டும் என அந்த மர்ம நபர் பேசினார். அதை நம்பி, அவர், ரூ.20 ஆயிரம் பணத்தை ஜி.பே மூலம் அனுப்பினார். பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாமல் போனது.மேலும் புதுச்சேரியை சேர்ந்த ராய் ரஞ்சித்திடம் மர்ம நபர் ஒருவர் பேசி, பிட் காய்னில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறினார். அதற்கு முன் பணம் கட்ட வேண்டும் என கூறினார். அதை நம்பி அவர், 15 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.ராகுல் என்பவரிடம் பேசிய மர்ம நபர், ஆன்லைன் மூலம், பணி செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் அந்த நபர் கூறியதை, அடுத்து, முன்பணமாக 3 ஆயிரம் ரூபாயை தனது ஆன்லைன் மூலம் அனுப்பினார். பின் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாமல் போனது.4 பேரும் நேற்று சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிந்து, பணம் மோசடி செய்யும் மர்ம கும்பளை தேடிவருகின்றனர்.