உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாவலர் நெடுஞ்செழியன் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நாவலர் நெடுஞ்செழியன் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

புதுச்சேரி: அரசு நாவலர் நெடுஞ்செழியன் மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.லாஸ்பேட்டை அரசு நாவலர் நெடுஞ்செழியன் மேல்நிலைப் பள்ளியில், கடந்த 85 முதல் 92ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது.மாணவர்கள் சார்பில், நாவலர் நெடுஞ்செழியன் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.பள்ளி முதல்வர் அர்பிதா முன்னிலை வகித்தார். உலகளாவிய மனித நேய சேவை சங்க தலைவர் ஆனந்தன் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.அதனை தொடர்ந்து, பள்ளிக்கு ஜெராக்ஸ் மிஷின் மற்றும் மைக் கருவிகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷினி உலகளாவிய மனிதநேய சேவை சங்கத்தின் துணை தலைவர் ராஜா, செயலாளர் பாபு, பொருளாளர் ரமேஷ் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி