உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு 

ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு 

புதுச்சேரி : புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கான நேரடி சேர்க்கை வரும் 13ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி அரசு கல்வித்துறையில் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கி வரும் புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பில் காலியாக உள்ள இடங்கள் நேரடி சேர்க்கை மூலம் வரும் 13ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நிரப்பப்பட உள்ளது. இப்பட்டயப் படிப்பில் சேரவிரும்புவோர் மேல்நிலைப் பள்ளித் தேர்வு அல்லது அதற்குச் சமமான தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களுடன், புதுச்சேரி, லாஸ்பேட்டை, தொல்காப்பியர் வீதி, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்திற்கு நேரில் வருகை தந்து சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ