| ADDED : ஜூலை 04, 2024 03:35 AM
புதுச்சேரி : புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் இரண்டாண்டு கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்) நடத்தப்பட்டு வருகிறது. நடப்புக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் கல்லுாரியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான நகல் சான்றிதழ்களுடன், தபால் மூலமாகவும், நேரிலும் மாணவர்கள் சமர்ப்பித்து வருகின்றனர். இந்நிலையில், பி.எட்., படிப்பு சேர்க்கைக்கான கல்வித் தகுதி, கட்டண விவரம் உள்ளிட்டவைகள் அடங்கிய கையேட்டினை, முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் தனது அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார். நிகழ்வில் புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி மேலாண் இயக்குநர் மாறன், நிர்வாகி சாரங்கபாணி, கல்லுாரி பொறுப்பு முதல்வர் தாமஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.