உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரைனி ப்ளூம்ஸ் பள்ளி ஆண்டு விழா

பிரைனி ப்ளூம்ஸ் பள்ளி ஆண்டு விழா

புதுச்சேரி: திருக்கனுார் பிரைனி ப்ளூம்ஸ் இன்டர்நேஷ்னல் சி.பி.எஸ்.சி., மேல்நிலைப் பள்ளியில் 9ம் ஆண்டு விழா, ஒருங்கிணைந்த விளையாட்டு விழா, பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா இரண்டு நாட்கள் நடந்தது. அரவிந்த் கல்வி குழுமத்தின் தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் திவ்யா முன்னிலை வகித்தார். முதல்நாள் விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் நடராஜன், குழந்தைகள் நல மருத்துவர் அகிலா அசோகன், மனித வள மேம்பாட்டு செயற்பாட்டாளர் அர்ச்சனா ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரண்டாம் நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக எஸ்.பி., ரச்னா சிங் கலந்து கொண்டு பேசினார். விழாவில் பள்ளியின் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில், திருக்கனுார் மற்றும் பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். அரவிந்த் கல்விக் குழும தலைமைச் செயல் அலுவலர் சத்தியவேலு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி