உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாஜி எம்.எல்.ஏ.,விற்கு கொலை மிரட்டல் 

மாஜி எம்.எல்.ஏ.,விற்கு கொலை மிரட்டல் 

புதுச்சேரி: முன்னாள் எம்.எல்.ஏ., விற்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாஸ்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் நந்தா சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ., இவர் நேற்று மதியம் 1:30 மணியளவில் சோலை நகர் மந்தைவெளி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவிற்கு சென்று விட்டு மீண்டும் தனது காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அக்கா சாமி கோவில் வீதியில், அங்காளம்மன் நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது பைக் மூலம் நந்தா சரவணன் வந்த காரை இடிப்பது போல் வந்து வழிமறித்துள்ளார். பின்னர், முன்னாள் எம்.எல்.ஏ.,வை தகாத வார்த்தைகளால் சுரேஷ் திட்டிவிட்டு, மீண்டும் முத்தியால்பேட்டை தொகுதிக்குள் வந்தால் உன்னை தீர்த்துக்கட்டி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் அளித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் சுரேஷ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்